-->

முன்பக்கம் , � வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல்

வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல்

hanging

 

எதோ லீவில் வந்திருக்கிறான் என்று சந்தோஷப்பட்டிருக்கிறார்கள் அவனது தாயும், தந்தையும். மகனுக்கு விருப்பமானதையெல்லாம் செய்து கொடுக்க முனைந்திருக்கிறார் தாய்.

ஒருநாள் கழித்து தாயும்,  தந்தையும் வெளியே போன சமயம் வீட்டைப் பூட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறான் இருபத்து நான்கு வயது கூட ஆகாத அந்த இளைஞன். ஒடித்திரிந்த தெருவும்,  ஞாபகங்களை உயிரோடு வைத்திருக்கும் உறவினர்களும்  வெறித்துப் போய் இருக்கிறார்கள். தாயும்,  தந்தையும் அழும் குரல்கள் வீட்டிற்குள்ளிருந்து கேட்டுக் கொண்டே இருக்கின்றன.

அவர்களுக்கு அதற்குப் பிறகுதான் தெரிகிறது. மகன் வேலை பார்த்து வந்த இன்போசிஸ் நிறுவனத்திலிருந்து அவனை நீக்கி விட்டர்கள் என்பது. முப்பதாயிரத்துக்கும் மேல் ஊதியம் பெற்று,  பெரும் கனவுகளைச் சுமந்தவனால், இந்த அதிர்ச்சியைத் தாங்க முடியவில்லை. சாத்தூரை ஒட்டிய வெங்கடாச்சலபுரத்தில் இது நடந்து ஒரு வாரம் கூட ஆகவில்லை.

வால் ஸ்டிரிட்டில் மையம் கொண்ட புயல் உலகம் முழுவதும் வீச ஆரம்பித்திருக்கிறது. நம் பக்கத்தில் இருப்பவன் அதற்கு பலியாகி இருக்கிறான்.

புயல் தீவீரமடையும் எனச் சொல்கிறார்கள்.

 

*

Related Posts with Thumbnails

51 comments:

 1. நம் பக்கத்தில் இருப்பவன் அதற்கு பலியாகி இருக்கிறான். புயல் தீவீரமடையும் எனச் சொல்கிறார்கள். ///

  Its true and fact . Now a days IT is going to the same :(

  ReplyDelete
 2. இங்கே உங்கள் வலைப்பதிவை இணைத்துக்கொள்ளுங்கள் http://www.tamil10.com/topsites/

  ReplyDelete
 3. மிக வருத்தம் தரும் செய்தி :-((

  ReplyDelete
 4. அதிர்ச்சியாக இருக்கிறது. Infosysல ஆள் குறைப்பு ஏதும் நடப்பதாக தெரியவில்லையே :(

  ReplyDelete
 5. CRR 4 வாங்கியவர்களுக்கும் ஆறு மாதம் ட்ரெயினிங் கொடுத்து சரியாக ஃபர்ஃபார்ம் பண்ணாதவர்களை தான் தூக்குவார்கள் என்று கேள்விப்பட்டேன்.

  CRR வந்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகலையே :(

  ReplyDelete
 6. ம்ம்ம்ம் - உண்மையோ கற்பனையோ - ஆனால் நிச்சயம் நடக்கத்தான் போகிறது.

  இளவயதில் கை கொள்ளாத ஊதியம் -எப்படிச் செலவழிப்பது என்றே தெரியாத இளைஞர்கள் - காசின் அருமை - வறுமை - தெரியாதவர்கள்.

  இக்கால கட்டத்தில் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. ஜீவா!

  உண்மைதான். மிக மோசமான காலம் எதிரே இருக்கிறது.

  அப்பாவித் தமிழன்!

  நன்றி.

  ReplyDelete
 9. kaasin arumai therintha alavukku vaazhkaiyin arumai theriyavillaiyo? mathippenkalai kuri vaithu sollik kodukkappadum kalvi manathairiyaththai katrukoduppathillai. Life is a lifetime chance enpathu en puriyavillai ivarkalukku. Siraku piyntha kuruvi, oru kan oru kaal illaatha kakkaikalukku kuda therinthirukkirathu, kidaiththirukkira vaazhkayin kadaisith thuli varai vaazhnthida vendum enru. Eththanai periya kaaranamaayirunthaalum tharkolaiyai enpathu thavaraana mudive. varuththathodu konjam kopamum varukirathu. Naalu varudam paartha velaiyai izhanthatharkaa iththanai varuththamenraal, irupaththi naalu varudam paarththu paarththu valartha antha petrorin izhappirku enna pathil solvathu?

  ReplyDelete
 10. முரளிக்கண்ணன்!

  வருத்தம்தான். மிகப்பெரிய சோதனைகளுக்கும், சவால்களுக்குமான அபாய ஒலி கேட்கிறது.

  ReplyDelete
 11. வெட்டிப்பயல்!

  வேலை நீக்கங்களை எந்தக் கம்பெனியும் வெளியே அறிவிப்பதில்லை. அது அந்தக் கம்பெனி பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான அறிகுறி என்பதும், அதன் விளைவுகள் பங்குச்சந்தை உட்பட பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பதும் தெரியும். அதுதான் கிட்டத்தட்ட அனைத்துக் கம்பெனிகளும் ஊழியர்களுக்கான சலுகைகளை குறைத்துக்க கொண்டுள்ளன. வெளியே அனுப்புவதற்கு காரணமாக, டிரெயினிங்கை பயன்படுத்துகின்றன. இருக்கும் சூழலை எதிர்கொள்ளும், சிறப்புத்தகுதி வேண்டும் என்று சொல்வார்கள்.

  பிப்ரவரி 19ம் தேதி இன்போசிஸ் சி.இ.ஓ பத்திரிக்கைகளுக்குக் கொடுத்த இந்தச் செய்தி இலைமறை காயாக சொல்கிறதே....
  Infy rules out job cuts, but sees tough times ahead
  17 Feb 2009, 0008 hrs IST, ET Bureau

  CHENNAI / BANGALORE: Infosys CEO and MD Kris Gopalakrishnan, while assuring that layoffs were not on the cards, has said that the restructuring
  of the company to adapt to the current economic environment could make some jobs redundant.

  “But that percentage is very low,” he told reporters after delivering a power talk to the students of Great Lake Institute of Management
  on Monday. “Our employees have, of course, been assessed periodically based on their performance. With the business situation being challenging now, and client demands increasing, the performance thresholds are bound to go up,” he said.

  The company’s bench utilisation has declined by about five percentage points from 80% to 73-75%. “So, we train our staff on two technological specialisations instead of one, as we usually do,” Mr Gopalakrishnan said. The company recently announced that it would increase its training duration for employees from 16 weeks to 29 weeks. Mr Gopalakrishnan added that there would be a real challenge in terms of finding trainers for the extended period.

  ReplyDelete
 12. சீனா!

  கற்பனையல்ல. கண்முன்னே நடந்த நிகழ்வு.

  காசின் அருமை மட்டுமே தெரிந்ததாலும், வாழ்வின் அருமை கொஞ்சம் கூட தெரியாததாலும் தற்கொலை செய்திருக்கிறான்.

  ஆனால் அவன் மட்டுமே காரணமா?
  பிரகாசமான உலகத்திற்குள் அவனைத் திரியவிட்டு, திடுமென இருட்டிற்குள் தள்ளினால், அவன் நிலமை என்னவாய் இருக்கும்?

  ReplyDelete
 13. வெண்மணி!

  உளம் நிறைந்த வேதனையோடு சொல்லியிருக்கிறீர்கள்.

  //Siraku piyntha kuruvi, oru kan oru kaal illaatha kakkaikalukku kuda therinthirukkirathu, kidaiththirukkira vaazhkayin kadaisith thuli varai vaazhnthida vendum enru.//

  முக்கியமான வரிகள்.

  ReplyDelete
 14. என்னதான் இருந்தாலும் தற்கொலை செய்வது மிகவும் தவறு. வாழ்க்கையை நாம் எப்படிய்ம் போராடியே ஆகவேண்டும். சர்வைவல் ஆப் பிட்டஸ்ட் என்று சொல்வார்கள்.. அதன்படிதான் எல்லா உயிரினங்களும்.... அதற்குள்ளாகவே தானாக முடித்துக் கொள்ளக்கூடாது.

  ம்ம்... இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போவுதோ... தேவுடா..

  ReplyDelete
 15. பெங்களூரில் படிக்கும், வேலை பார்க்கும் பலருக்கு தற்கொலை தான் வாழ்வின் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வு என்று ஏன் தோன்றுகிறது எனப் புரியவேயில்லை எனக்கு.

  All problems have multiple solutions and one must be wise enough to choose the right one for him/her.

  ஒரு வேலை போனால் கண்டிப்பாக சில மாதங்களுக்கு பிறகு வேறு வேலை கிடைக்கும். IT துறையே மக்கி மண்ணாக போனாலும் வேறு வேலைகளா இல்லை இந்த உலகத்தில்?

  ஒரு மனிதன் தற்கொலை செய்து கொள்ள அவனது பெற்றோர் வாழ்க்கையின் அருமையை சரியாக சொல்லித் தராததும், பிரச்சினைகளை சமாளிக்கும் தைரியத்தை வளர்க்காததும் தான் என்றாலும், இப்போது அதைப் பற்றியெல்லாம் பேசியும் பயனில்லை. மகனை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு எனது அனுதாபங்கள்.

  ReplyDelete
 16. //
  அதிர்ச்சியாக இருக்கிறது. Infosysல ஆள் குறைப்பு ஏதும் நடப்பதாக தெரியவில்லையே :( //

  As requested by our PM, IT and other companies are not laying off people in 2009. But they are asking employees (non-performers / those on bench for more than a month) to resign.

  So far at least 500,000 people had lost their jobs in India in the last 2 months, according to CNN-IBN.

  ReplyDelete
 17. ஆதவா!

  ஜோ!

  உங்கள் இருவரின் பகிர்வுமே, வாழ்வை எந்த சந்தர்ப்பத்திலும் எதிர்த்துப் போராட வேண்டும் என்று ஒலிக்கிறது. இதுதான் இந்நேரத்தின் தேவை. நம் இளைய தலைமுறைக்கு நாம் நம்பிக்கையை வளர்க்க வேண்டும்.

  ReplyDelete
 18. அனானிமஸ்!
  //So far at least 500,000 people had lost their jobs in India in the last 2 months, according to CNN-IBN.//

  எத்தனை சோகம் இது!

  ReplyDelete
 19. தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php#blogger நன்றி.

  ReplyDelete
 20. நான் கொஞ்சம் பொதுவுடமை அரசியல் சார்பு உள்ளவன். என்னுடைய மாமா ஒருத்தர் எப்பொழுதும் என்னை கிண்டல் பன்னுவார், காவேரிபட்டினத்தில் எதாவது நடந்தால் கூட அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் காரணம் என்று நீங்கள் சொல்லுவீர்கள் என்று. ஆனால் இன்றைக்கு எங்கோ ஒரு குக் கிராமத்தில் கூட பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதும், அதற்கு அமெரிக்க பொருளாதார சீர்குலைவு காரணம் என்று பாமரனும் சொல்லுவதை எனது மாமா கேட்டால் என்ன சொல்லுவார் என்று நினைத்துப் பார்த்தேன்.

  இது ஏதோ நாங்கள் அன்றே சொன்னோம் என்ற பெருமைக்காக சொல்லவில்லை. நாம் சூழ்நிலைக்கு மயங்கி உண்மைகளை பார்க்க தவறுவதை சுட்டிக் காட்டவே இதனை சொன்னேன்.

  விவசாயிகளின் லட்சக்கணக்கான தற்கொலைகளை ஐடி துறை வரை விரிவுபடுத்தியதைத்தான் நாம் வல்லரசு என்று கொண்டாடுகிறோம். நாடு முன்னேறியது என்று கூத்தாடுகிறோம்.

  தொலை பேசி கட்டணம் குறைந்து வரும் இதே காலகட்டத்தில்தான் இரண்டே மாதங்களில் 18 ரூபாய் அரிசி 28 ரூபாய் ஆகிவிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

  என்னவோ போங்க...

  ReplyDelete
 21. மிகவும் வருத்தமான விசயம் தான்!

  கொஞ்சம் சம்பளம் அதிகம் வந்ததும் அதற்கான செலவும் இவர்களுக்கு கூடவே ஒட்டி கொள்கிறது!

  இதை பற்றி கூட யோசித்து வைத்திருந்தேன்.

  இந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்து வருபவர்களுக்கு அரசு திறமை மிக்க ஆற்றுபடுத்துனர் மற்றும் தனிமனித மேம்பாட்டு அதிகாரிகளை கொண்டு கவுன்சிலிங் அளிக்க வேண்டும்.

  வேலை கிடைக்காவிட்டாலும் சோர்வடையாமல் மேலும் முயற்சி செய்வது, தற்சமயம் கிடைக்கும் வேலையை பார்ப்பது.

  பொருளாதார கொள்கைகள், பணத்தை கையாளுவது போன்றவை ஒவ்வொரு மாணவருக்கும் சொல்லிக் கொடுக்கபட வேண்டும்.

  ReplyDelete
 22. வருத்தமளிக்கிறது. வேலை இழப்பு என்பது தவிர்க்கமுடியாதது.வேலை இல்லாத காலங்களில் இருப்பதை வைத்து வாழப்பழகிக்கொள்ளவேண்டும்.

  ReplyDelete
 23. இன்று எல்லா துறையில் இந்த தேக்கநிலை இருக்கிறது.பொதுவாக‌ பிரச்சனைகளை கையாளம் திறன் அத்துறையில் குறைவு என்பதே இதற்கு காரணம்.அது மட்டும்யின்றி செலவீன குறைப்பு இத்துறையில் ஊழியர்களின் சம்பளத்தை தவிர வேறு வழியில்லை என்பதாலும்,(சுமார் 60%ஊழியர்கள் சம்பளம்) மற்ற துறைகளில் இது 20% மேல் இல்லை.இனி வரும் காலங்களில்
  மற்ற துறைகளின் செயல்பட்டையும் இவர்கள் பார்க்கவேண்டும்.தற்போது நிலவும் பொருளாதார தேக்கநிலையினால் ஆயிரம்கோடிக்கு மேல் இழப்பை சந்தித்த எங்கள் ஊரில் தற்போது உலவும் ஒரு பழமொழி "இந்த மடம் இல்லையென்றால் இன்னெரு சந்தைமடம்" என்பதைபுரிந்து கொள்ளவேண்டும்

  ReplyDelete
 24. you have written the "facts". It brought the conditions of our nation.But you rewrite the article and continue with elaborate facts/TRUTHS of the other stories of IT INDUSTRIES. Give moral boost and hopes to the youths.They should not lost their "hope".Because they are our "HOPE OF FUTURE" as one of a famous union leader Shri.B.T.Ranadive
  rightly said.continue this article with giving hope to our youths.And explain the reasons and background of the disaster=Selvapriyan.Chalakudi.

  ReplyDelete
 25. இன்னும் infosys- இல் நடக்கும் சில உண்மைகள். என்னுடைய நண்பர்களில் 10 ல் 3 மட்டுமே உள்ளேயே இருக்கிறார்கள். மைசூர் training center-ல் இந்த வருடம் ஒரு மாணவி தன்னை மைத்து கொண்டிருக்கிறாள். இன்னொருவன் மன நிலை பாதிக்கப்பட்டு கையில் கிடைத்ததை எல்லாம் ஒடித்திருக்கிறான். மற்றொருவன் training ல் தோல்வியடைந்து வீட்டுக்கு வந்து பெற்றோருக்கு அதை பற்றி சொல்லாமல் விடுமுறை என்று சொல்லி கொண்டு 4 நாள் கழித்து பெற்றோர் இல்லாத சமயம் தூக்கில் இட்டு கொண்டான். TCS மட்டுமே புதியவர்களை தூக்குவதில்லை. நானும் தேர்வான கம்பெனி இன்னும் என்ன கூப்பிடவே இல்ல. எங்க 2008 batch தான் ரொம்ப பாதிக்கப்பட்டது. இன்போசிஸ் paas mark- ஐ அதிக படுத்தி விட்டது. உண்மையா பசங்க ஏன் இப்டி போறாங்கன்னா, என் நிலைமைய எடுத்துகோங்க. நான் first slot la வந்த சிறந்த கம்பெனில place ஆனேன். இது வரைக்கும் arrear என்பதே நான் பாத்ததில்ல. அப்டி தான் நெறைய பேர் படிச்சாங்க. எங்க காலேஜ்ல எனக்கும் பின்னாடி place ஆனவங்க எல்லாம் இப்போ வேலைல இருக்காங்க. இன்னும் சொல்ல போனா core கம்பெனில place ஆனவங்க எல்லாம் நாங்க முடிச்சு ஒரே மாசத்துல உள்ள போய்ட்டாங்க. நான் first companies-ல place ஆகிட்டு ஒரு வருஷம் ஆகியும் இன்னும் வீட்ல தான் இருக்கேன். நாங்க எந்த தப்புமே பண்ணாம எங்களோட எதிர் காலம் புரியாம இருக்கோம். இன்னொரு விஷயம்... நான் எங்க school first பனிரெண்டாம் வகுப்புல. TCS பசங்க இப்போ மாசம் இருபது ஆயிரம் சம்பாதிக்கிறாங்க. இன்னும் எங்க வீட்ல ரெண்டு வருஷம் லோன் கட்டாம இருக்கு. இதே நிலைமைலதான் எல்லோரும் இருக்காங்க. மாசம் 25000 ஆச காமிச்சிட்டு இப்போ எனக்கு ஒன்னுமே இல்ல. 5000 க்கு வேல செய்ய நான் தயார். வேல தர ஆள் இல்ல. எந்த decesion எடுக்க முடியாம நான் பட்ற கஷ்டம்...ஏற்கனவே ஒரு வருஷம் போச்சு. கடைசி ஒரு வருஷமா நாங்க பட்ற மன உளைச்சல் தான் இதுக்கெல்லாம் காரணம். இன்னும் நெறைய பேசலாம். கடைசியா சொல்லனும்னா... இப்போதைக்கு என்கிட்டே இருப்பது ரெண்டு... ஒன்னு படிப்பு.... அதுக்கு இப்போ மதிப்பில்ல. ரெண்டாவது நம்பிக்கை... அது இருஉகும் வரைதான்.. எல்லாமே... என்னோட அப்பா எவ்ளோ கஷ்ட பட்டு படிக்க வெச்சார்னு எனக்கு தெரியும். திரும்ப அவங்க எதுவும் எதிர் பாக்கல. நான் நல்லா இருக்கணும்னு அவரு கஷ்ட பட்டாரு. அவங்களுக்கு நான் செய்ய வேண்டியது அவங்க சந்தோச பட்ற மாதிரி வாழனும். அவங்கள இன்னும் கஷ்ட பட்ற வெக்கிறோமே. என் வீட்ட சுத்தி எல்லோரும் நான் என்னமோ place ஆனேன்னு பொய் சொன்ன மாதிரியே கேக்றாங்க. இது வரைக்கும் எங்க அப்பா-அம்மா என்ன படின்னு சொன்னதே கிடையாது. இப்போ போறவன் வரவன் எல்லாம் சும்மா இருக்காத. இத பண்ணு... அத பண்ணு... யப்பா... என்ன பண்ணனும்னே தெரியல... சின்ன வயசுல இருந்தே யார் கிட்டயும் எதுக்கும் நின்னது கெடயாது... இப்போ தெரிஞ்சவங்க தெரியாதவங்க கிட்ட எல்லாம் reference கேட்டு நிக்க வேண்டி இருக்கு. இது வரைக்கும் எக்ஸ்ட்ரா மார்க் போடுங்கனு நின்னது கெடயாது.... இப்போ... தழைகீழ்... பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்... என்னை போன்றோர்க்காக ஒரு நிமிடம் பிராத்தனை செய்யுங்கள்.

  ReplyDelete
 26. ஒரு வேலை இந்த கம்பென்யில் place ஆகம் இருந்திருந்த நான் வேற கம்பெனில place ஆகி இருந்திருப்பேன். இத யோசிக்கும் போது வாழ்கை அதிர்ஷ்டத்தில் தானா... யாராவது எனக்கு ஆறுதல் சொல்லும் திறமை இருந்த சொல்லுங்க பாப்போம். :(

  ReplyDelete
 27. Anonymous Bhavanishankar said...
  //மாசம் 25000 ஆச காமிச்சிட்டு இப்போ எனக்கு ஒன்னுமே இல்ல. 5000 க்கு வேல செய்ய நான் தயார். வேல தர ஆள் இல்ல.//  நீங்க மற்ற துறைகளில் முயற்ச்சி செய்யுங்கள் கண்டிப்பாக கிடைக்கும்.இன்று
  எல்லா துறையிலும் மென்பொருள் தேவைபடுகிற்து.

  ReplyDelete
 28. அன்பின் பவானி ஷங்கர்

  கவலை வேண்டாம் - சீக்கிரமே சரியாய் விடும். சிறு நிறுவனங்கள் இருக்கின்றன - 5000/- கிடைக்காதா - தெரியவில்லை. முயற்சி முயற்சி - முயற்சிகள் தவறலாம் - ஆனால் முயலாமல் இருக்காதே.

  மேற்படிப்பு தொடரலாம் - பகுதி நேர வேலைகள் செய்யலாம்ம் - மென்பொருள் தொடர்பான வேலைகளிலேயே.

  உண்மை நிலை உரைத்திருக்கிறாய். எனது நெருங்கிய நண்பர் மகன் இதே நிலை தான் - 2008ல் பொறியியல் முடித்தவன்.

  என்ன செய்வது .........

  ReplyDelete
 29. அனானிமஸ்!

  //தொலை பேசி கட்டணம் குறைந்து வரும் இதே காலகட்டத்தில்தான் இரண்டே மாதங்களில் 18 ரூபாய் அரிசி 28 ரூபாய் ஆகிவிட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.//

  உண்மை இப்படித்தான் முகத்தில் அறைவதாய் இருக்கிறது. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறுகன்னத்தையும் இந்த ம்க்கள் இன்னும் எத்தனை காலம்தான் காட்டிக்கொண்டு இருப்பார்களோ?

  ReplyDelete
 30. பாவானி ஷங்கர்,
  இதோ உங்களுக்கான என் பதிவு

  கவலை வேண்டாம். இதுவும் கடந்து போகும்.

  ReplyDelete
 31. வால் பையன்!

  இருக்கும் நிலைமைகளை ஏற்றுக்கொண்டு, அதற்கேற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் போலிருக்கிறது உங்கள் கருத்து. இருக்கும் நிலைமைகளை மாற்ற நம்பிக்கையோடு போராட வேண்டும் என நான் நினைக்கிறேன்.

  ReplyDelete
 32. வருங்கால முதல்வர்!

  வால் பையனுக்குச் சொன்னதையே உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

  ReplyDelete
 33. :(((((

  தொடர் பிரச்சினைகள். தற்கொலை எதற்கும் தீர்வல்ல:(

  இது போல் பல குடும்பங்கள் தவிக்கின்றன மாதவராஜ். புத்திர சோகம் மிகக்கொடுமையானது.

  ReplyDelete
 34. திறமைசாலியான உங்களுக்கு இன்னும் ஒரு சிறந்த மகத்தான வாய்ப்பு காத்திருக்க வேண்டும் பவானிஷங்கர். அதனாலேயே இப்போது இந்த சிரமங்கள். நம்மைப் பண்படுத்த துன்பங்கள் பலரூபங்களில் வரும். உடனடி காரணங்கள் நமக்குத் தெரியாது. பின்னொரு நாள் அது விளங்கும். அதுவரை துயரப்படாது கொஞ்சம் பொறுமையாய் இருங்கள். எல்லாம் நல்லபடியாய் நடக்கும்.

  இனி வரும் காலம் நல்லதாக இருக்கும் என்ற நம்பிக்கையினை வளர்த்துக்கொண்டு வாழவேண்டும். வளர்ச்சிப் பாதையின் வாசல் தானே திறக்கும் பவானிஷங்கர்.

  ReplyDelete
 35. சொல்லரசன்!

  //எங்கள் ஊரில் தற்போது உலவும் ஒரு பழமொழி "இந்த மடம் இல்லையென்றால் இன்னெரு சந்தைமடம்" என்பதைபுரிந்து கொள்ளவேண்டும்//

  அப்படி நிறைய மடங்கள் இருக்கவாச் செய்கிறது?

  ReplyDelete
 36. விமலாவித்யா!

  ஒப்புக்கொள்கிறேன். இதற்கான முழுப் பின்னணியையும், எதிர்க்கிற நம்பிக்கையையும் ஒருசேர சொல்லத்தான் ஆக வேண்டும். முயற்சிப்போம்.

  ReplyDelete
 37. பவானி சங்கர்!

  காலையில்ருந்து இரண்டு மூன்று தடவை உங்கள் கருத்தை படித்து விட்டேன். உங்களைப் போன்றோர் இன்று நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

  நான் உங்களுக்குச் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். இந்த உலகம் பரந்தது. உங்களுக்காக சிந்திக்க, ஆதரவாய் இருக்க மனிதர்கள் எங்கும் இருக்கிறார்கள். நம்பிக்கை மட்டும் ஒரு போதும் இழக்காதீர்கள்.அதுதான் வாழ்வின் ஆதார சுதி. ஒரு துளி காற்றை சுவாசித்து பெருங்காற்றயே எதிர்கொள்ளும் சிட்டுக் குருவியின் வல்லமை நமக்கு வேண்டும்.

  ReplyDelete
 38. மதுமிதா!

  நிச்சயம் பவானி சங்கர் நல்ல நிலைமைக்கு வருவார்.

  ReplyDelete
 39. அன்புள்ள மாதவ்

  படம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதனை நெகட்டிவ் இமேஜீல் கொடுக்கலாம்...

  ReplyDelete
 40. //ஆனால் அவன் மட்டுமே காரணமா?
  பிரகாசமான உலகத்திற்குள் அவனைத் திரியவிட்டு, திடுமென இருட்டிற்குள் தள்ளினால், அவன் நிலமை என்னவாய் இருக்கும்?//

  உண்மை. அந்தப் பிரகாசம் எவ்வளவு பொய்யும் வஞ்சமும் நிறைந்ததென்பதற்கு சாட்சி தான் இது.

  ReplyDelete
 41. // ஒரு துளி காற்றை சுவாசித்து பெருங்காற்றயே எதிர்கொள்ளும் சிட்டுக் குருவியின் வல்லமை நமக்கு வேண்டும்//

  Excellent sir!!!

  ReplyDelete
 42. Bhavani Shankar™March 11, 2009 at 9:19 PM

  நான் இதெல்லாம் சொன்னதுக்கு பிறகுதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு. என்னைக்குமே நான் நம்பிக்கையை இழக்க மாட்டேன். எனக்கு பதில் அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றி. நான் electrical and electronics engineering(EEE) dept- ஐ சேர்ந்தவன். ஆதலால் இன்னும் IT field-ஐ நம்ப போவதில்லை. நான் IT நண்பர்களை காயப்படுத்த சொல்லவில்லை.அனுபவத்தில் சொல்கிறேன். நானா இல்ல இந்த வால் ஸ்ட்ரீட் புயலானு பாத்துடுவோம்.... :)

  ReplyDelete
 43. சந்திப்பு!

  நீங்கள் சொல்வது ஒரளவுக்கு உண்மைதான்.ஆனால் படத்தை விட செய்தியே எனக்கு அதிக அதிர்ச்சியானதாய் இன்னமும் இருக்கிறது.

  ReplyDelete
 44. தீபா!

  வெட்டிப்பயல்!

  உங்கள் பகிர்வும், தோழமையும் எதாவது செய்ய வேண்டும் என்று தீவீரப்படுத்துகிறது.

  நன்றி.

  ReplyDelete
 45. பவானி சங்கர்!

  ஆஹா...!
  வாருங்கள்... வாழ்ந்து பார்ப்போம்.

  நாமென்ன விட்டில் பூச்சிகளா?
  விளக்குகளாய் வெளிச்சம் தருவோம்.

  உங்களோடு நாங்களெல்லாம் இருக்கிறோம்.

  ReplyDelete
 46. Hallo sir ! Already the shocking news affected our human feelings.The photos added fuel to the core issues.it affected mind.It gives negative feelings.Because photos have more effects.i agree with the view---selvapriyan---Chalakudy

  ReplyDelete
 47. ஐயா, இந்த பதிவு புத்திசாலித்தனமான அமெரிக்க எதிர்ப்பு பிரசாரம் போல் தோன்றுகிறது. ஒரு இளைஞனின் மரணத்தை பயன் படுத்தி இருப்பது வருத்தம் அளிக்கிறது.


  தன் நாட்டில் மாதம் ஐந்து லட்சம் பேர் வேலை இழக்கும் நிலையிலும் வேறு எந்த நாடு globalisation கடைபிடித்து தன் வேலைகளை பிற நாடுகளுக்கு அளிப்பதை தொடரும்.

  ReplyDelete
 48. சபாஷ் பவானிசங்கர், வாழ்க்கையில் வெற்றிபெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 49. முகமது பாருக்March 12, 2009 at 5:19 PM

  வாழ்க்கை மனிதனுக்கு ஒருமுறைதான், அதில் வாழ்ந்தே ஆகவேண்டும்..

  மரணம் நாம் பிறக்கும்போதே நிச்சியமானதொன்று..அதை தேடி நாம் போக கூடாது, அதுதான் நம்மை தேடி வரவேண்டும்...மகனை இழந்து தவிக்கும் தாய், தகப்பனுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

  இதே மரணத்தின் வலியை போன வருடம் (என்றுமே) எனது வீட்டிலும் விளையாட்டாக நடந்தது எங்கள் தேவதையை இழந்தோம். ஒவ்வொரு நாளும் கண்களின் நீருடன் போராடிக்கொண்டு வாழ்கிறோம்..

  மதம், சாதி, இனம், மொழி எது ஆனாலும் மனிதனுக்கு ஒரே வாழ்கைதான்..வாழ்ந்து பார்த்துவிட்டு போகவேண்டும்...

  கண்ணீருடன்

  முகமது பாருக்

  ReplyDelete
 50. கார்த்திகேயன்!

  தங்கள் பின்னூட்டம் பார்த்து அதற்கு மறுமொழியாக ஒரு பதிவும் எழுதி விட்டேன். பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

  ReplyDelete
 51. தம்பி முகமது பாருக்!

  துயரம் கலந்த வார்த்தைகளுடன் தாங்கள் நேரில் பேசியது போலிருக்கிறது.
  //மதம், சாதி, இனம், மொழி எது ஆனாலும் மனிதனுக்கு ஒரே வாழ்கைதான்..வாழ்ந்து பார்த்துவிட்டு போகவேண்டும்...//
  ஆஹா...!

  ReplyDelete