Type Here to Get Search Results !

ஆஹா வந்துருச்சி.... தேர்தல் வந்துருச்சி..!

vote-lock copy நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. வரும் மூன்று மாதங்களுக்கு தேசமே பைத்தியம் பிடித்தது போல இருக்கும். காணாமல் இருந்த பலர்  வெடுவெடு உடைகளோடு பளீரென்று தெருக்களில் நடமாடுவார்கள். பார்க்கும் இடமெல்லாம் கட்சிச் சின்னங்கள் மக்களைப் பார்த்து கெஞ்சிக்கொண்டு இருக்கும்.  டீக்கடைகளிலிருந்து, டி.விக்கள் வரை ஒரே பேச்சுச் சத்தந்தான். பத்திரிக்கைகள், தொகுதி நிலவரங்கள் அலசி ஆராய்ந்து  ‘பொறுத்திருந்து பார்ப்போம்’, அல்லது  ‘காலம் பதில் சொல்லும்’ என்று சஸ்பென்ஸோடு முடித்து ஆவலைத் தூண்டிக்கொண்டு இருக்கும்.

ஊர் ஊராய், தெருத் தெருவாய்க் கூட்டங்கள் நடத்தி  பிரச்சாரங்கள் என்ற பெயரில் தாறுமாறாய் வசவுகள் வீசப்படும். ஜோஸ்யர்கள், தலைவர்களின் ஜாதகங்களோடு மக்களுக்குச் சொல்ல வேண்டிய செய்திகளை  எழுதிக்கொண்டு இருப்பார்கள். சினிமா நடிகர்கள் சிலர் வசனங்களை பொது மேடையில் அள்ளிவிடும் காட்சிகள் இலவசம். பிளக்ஸ், பிரிண்டிங், மைக்செட்  தொழில் பண்ணுகிறவர்களுக்கு இது ‘கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டும்’ காலம். கூரையே இல்லாத டாஸ்மார்க் கடைகளைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்தியக்‘குடி’மகன்களின் கொண்டாட்டம் அல்லவா!

ஊர் ஊராக, குளிர்பதனம் செய்யப்பட்ட வாகனங்களில் பயணம் செய்து மக்களை சந்திக்க வேண்டிய சோதனையான தருணம் இது தலைவர்களுக்கு. பிறகு  பிரச்சினையில்லை. ஐந்து வருடங்களுக்கு மலையேறிக் கொள்ளலாம். அங்குமிங்குமாக தவித்து, கிடைக்குமிடத்தில் ஒண்டிக்கொண்டு வீர வசனம்  பேசுபவர்களை கடைசி நிமிடம் வரை சந்திக்கலாம். கடைகோடி சாமனியனுக்கும் தெரிகிற பேரங்களே அதிர்ச்சியளிப்பதாய் இருக்க, உயர்மட்டத்தில் நடக்கும்  சதிகளை யோசிக்கக்கூட பிரஜைகளுக்கு தெம்பு இருக்காது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தேர்தல் என்றால் சும்மாவா?

தேர்தலில் நிற்க வாய்ப்புகள், அதில் விரக்தியடைந்தவர்கள் என ஆரம்பிக்கும் இந்த படலங்களில் நாள் தோறும் அத்தியாயங்களாய் நீளும். இந்த தொகுதியில்  இந்த சமூகம் இத்தனை சதவீதம் என்றும், இவர் இந்த சமூகம் என்றே பலரும் இங்கு வெற்றி வாய்ப்புகளைப் பற்றி பேசிக்கொண்டு இருப்பார்கள். இவர்  நல்லவர், இவர் தந்தை நல்லவர் என்றெல்லாம் அனுக்கிரகங்கள் யோசிக்கப்படும். இவருக்கும், அவருக்கும் ஆகாது, அவர் எப்படியும் இவரைக் காலைவாரி  விடுவார் என்றும் அனுமானங்கள் தெளிக்கப்படும். சண்டைகள், பதற்றங்கள் என படர்ந்து கிளைமாக்ஸில், போலீஸ் மற்றும் இராணுவம் துணையோடு எல்லாம்  முடிவுக்கு வரும் போது, சிலர் தெருவில் பட்டாசு வெடிப்பார்கள். சிலர் மௌனத்தில் புழுங்கிப் போவார்கள்.

நம் மண்டைக்குள் இப்படிப்பட்ட காட்சிகளே திணிக்கப்படுகின்றன. இந்த மொத்த விவகாரங்களிலும் தனிநபர்கள் முன்னிறுத்தப்படுவதும், நாற்காலிச் சண்டைகளுமே பேசுபொருளாகி விடுகிறது. இதுதான் அரசியல் என்றாகி விடுகிறது. இந்த ஐந்து வருடங்களில் நாடும் மக்களும் என்ன பிரச்சினைகளை எதிர்கொண்டனர், ஒரு அரசு அதை எப்படி சமாளித்தது என்று யோசிக்க விடுவதில்லை. யார் யாரெல்லாம் அப்போது மக்கள் பக்கம் உண்மையாகவே நின்றார்கள் என நம் சாதாரண மக்களை சிந்திக்கத் தூண்டுபவையாக இந்த தேர்தல் நிகழ்வுகள் இருப்பதில்லை. பிரச்சினைகளில் சுவராஸ்யம் காட்டாமல், பரபரப்புக்களுக்கே முக்கியத்துவம் கொடுப்பவர்களாக மக்கள் உருவேற்றப்படுகிறார்கள்.

ஒரு கனவு இருக்கிறது. கிடைக்கும் இடங்களைப் பொறுத்தோ, வெற்றி வாய்ப்புகளை வைத்தோ கூட்டணி வைப்பதை விட்டு விட்டு, கொள்கைகளுக்காக  கூட்டணிகள் அமைக்க கட்சிகள் முன்வரவேண்டும். அவர் வர வேண்டும், இவர் வர வேண்டும் என்று  நினைக்காமல் நம் பிரச்சினைகளை தீர்ப்பவர்கள்  யார் என்று யோசிக்க மக்கள் முன்வர வேண்டும்.

அப்போதுதான் இது தேர்தலாகவும் இருக்கும். ஜனநாயகமாகவும் இருக்கும். அதுவரை-

 

*

கருத்துரையிடுக

8 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
 1. காணாமல் இருந்த பலர் வெடுவெடு உடைகளோடு பளீரென்று தெருக்களில் நடமாடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டது. யோசிக்க மக்கள் முன்வர வேண்டும். அப்போதுதான் இது தேர்தலாகவும் இருக்கும். ஜனநாயகமாகவும் இருக்கும். அதுவரை- சிலர் மௌனத்தில் புழுங்கிப் போவார்கள்.
  tried to cut and repaste your sentences...keep writing. best wishes

  பதிலளிநீக்கு
 2. //ிடைக்கும் இடங்களைப் பொறுத்தோ, வெற்றி வாய்ப்புகளை வைத்தோ கூட்டணி வைப்பதை விட்டு விட்டு, கொள்கைகளுக்காக கூட்டணிகள் அமைக்க கட்சிகள் முன்வரவேண்டும். அவர் வர வேண்டும், இவர் வர வேண்டும் என்று நினைக்காமல் நம் பிரச்சினைகளை தீர்ப்பவர்கள் யார் என்று யோசிக்க மக்கள் முன்வர வேண்டும்.//your article is very general in nature.So many magazines/persons in general used to say and write these sentences.You also repeated the same.Could you say who is like that "Policy oriented Party/ies" and "people oriented Leaders"??
  Come out>>>tell the people who is right people to be elected ? in the coming elections.More important who should not be elected in the election festival.
  The persons who ARE opposing THE CONGRESS AND BJP Shall be elected..Is it correct sir ?Because the economic policies of the congress/BJP(SAME)are responsible for losing 8 jobs in India in a single minute.So far 5,48,000 jobs were lost within 5 1/2 months of New economical policies of CONGRESS/BJP(SAME)---Selvapriyan

  பதிலளிநீக்கு
 3. என்னைக் கேட்டால்.... இது இன்னொரு தேர்தல்... அவ்ளோதான். மற்றபடி கொள்கைகள் முதல், ஆட்டங்கள் வரை எதுவும் மாறப்போவதில்லை.

  நம் மக்களுக்கும் புத்தியில்லை..... ஓட்டு போடுவது யாருக்கு என்கிற குழப்பம் இன்னும் தீரவில்லை... அதற்கு ஏற்றார்போல் கட்சிகளின் பெருக்கம்... தன்னைச் சுற்றி நாற்பது பேர் இருந்தால் கட்சி ஆரம்பிக்கிறார்கள்... கொடுமைங்க!!!!!

  பார்ப்போம்./.... அடுத்த தலையெழுத்து யாரென்று!!

  பதிலளிநீக்கு
 4. முரளிக்கண்ணன்!

  நிறைவேறணும்.

  ருத்ரன்சார்!

  நன்றி. தங்கள் வாழ்த்துக்களோடு தொடருவேன்.

  பதிலளிநீக்கு
 5. விமாலாவித்யா!

  பொதுவாகத்தான் எழுதியிருக்கிறேன். மக்கள் புரிந்து கொள்ளட்டுமே.

  பதிலளிநீக்கு
 6. அமிர்தவர்ஷிணீ அம்மா!

  நன்றி.

  ஆதவா!

  நன்றி.

  பதிலளிநீக்கு