இலங்கைப் போரும், கலிங்கப் போரும்

tamil genocide

படங்களையும், செய்திகளையும் படித்து விட்டு ஒவ்வொரு நாளும் ஈரக்குலை பதறிப் போகிறேன். ஐயோ, ஐயோவென உடல் முழுவதும் புலன்கள்  துடிக்கின்றன. வெடித்த உடல்களும், சிதறிய உறுப்புகளும், எலும்புகள் தெரிய கருகிக் கிடக்கும் பிஞ்சுக் குழந்தைகளும் மனித இயல்புகளை கடுமையாய்  தாக்குகின்றன. தீபாவளி வேட்டுக்கே அலறிக்கொண்டு வீடுகளுக்குள் ஓடிவரும் நம் குழந்தைகளை, இலங்கயின் யுத்த பூமியில் வைத்து கற்பனை செய்து  பார்க்கக்கூட நம்மில் யாருக்கும் துணிவு இருக்காது. முத்துக்குமரன் ஏன் தீக்குளித்தான் என்பதை என் மூளையில் படர்ந்திருக்கும் வெப்பம் சொல்கிறது. என்ன  செய்வது, எப்படி இந்தக் கொடுமைகளை நிறுத்துவது என்று எந்த உருப்படியான வழியுமற்று, கையாலாகாத்தனம் சிந்தனைகளையும், செயல்களையும்  பீடிக்கிறது. பேச்சுககளும், ஆவேசமானக் கத்தல்களும், உணர்ச்சியை ஏற்றி பித்தம் தலைக்கேற மட்டுமே வைக்கின்றன. இந்தச் சண்டை, பிரச்சினைகளின்  பூர்வாங்கம், வரலாறு, நிலைபாடு எனும் ஆராய்ச்சிகளில் ஆளுக்கொரு திசையில் நின்று கொண்டிருக்க, கிழக்கு திசையில் ஒவ்வொரு நாளும் சூரியன் இரத்தம்  சொட்டச் சொட்டச் சொல்லும் செய்திகளை என் ரத்தம் கேட்டுக் கொதிக்கிறது.

நண்பர் விமலா வித்யா அவர்களிடம் வேகமாக கொட்டி தீர்த்த போது, “என்ன செய்ய முடியும், நீங்கள் நிதானமாக இருங்கள். போர் என்று வந்தால்  இப்படித்தான் ஆகும். ஆயுதம் எடுக்கிறவர்கள் இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும்.” என்றார். “என்ன சொல்கிறீர்கள். பாதிக்கப்படுவது நம்  குழந்தைகள்... சாதாரண அப்பாவி மக்கள்” என்று அரற்றினேன். “ஆமாம்.. யுத்தம் எங்கு நடந்தாலும், அங்கு முதலில் குழந்தைகளும், பெண்களும்தான்  பாதிக்கப்படுகிறார்கள். மிக அருகே, நமக்கு நெருக்கமானவர்களுக்கு இந்த கோரம் நிகழும்போது துடித்துப் போகிறோம்” என்றார். அறிவுக்குப் புரிந்தமாதிரி  இருந்தாலும், உணர்வுக்கு புரியவே இல்லை என்பதைச் சொல்லியாகத்தான் வேண்டும்.

நேற்று விடுதலைப் புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் என்று கேள்விப்பட்டவுடன் சட்டென்று ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. திருப்பி அடிப்பது நம்  மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாசக்கார நாய் ராஜபக்‌ஷே இந்தக் கோபத்தையெல்லாம் நம் அப்பாவி மக்கள் மீதுதானே காண்பிப்பான் என்று சிந்தனை வந்தபோது கலக்கமாய் இருந்தது. இருக்கிறது. காலம் நம்மை வேடிக்கை பார்க்கிறது.

0

பெரும் வெற்றியின் மீது உட்கார்ந்து ஒரு சக்கரவர்த்தி உடைந்து, அழுது புலம்பிய வரலாற்றைச் சிறுவயதிலேயே நாம் படித்திருக்கிறோம். யுத்த களத்தில்  இறந்து போனவர்களைப் பார்த்து பார்த்துக் கதறினார் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அசோகரின் அத்தனை ஆசைகளையும் கொன்று, அன்பை விதைத்தது  கலிங்கத்து யுத்தம் என்பது உலகுக்கேத் தெரியும். புத்தபிட்சுக்களே அந்த மகாச் சக்கரவர்த்தியின் மனமாற்றத்துக்கு காரணம் என்பதும், அசோகர் தன் பிற்காலம்  முழுவதும் புத்த மதத்தைத் தழுவினார் என்பதும் அதன்பின் அவர் எந்த நாட்டின் மீதும் யுத்தம் தொடுக்கவில்லை என்பதும் ஒரு அதிசயமாக, ஆச்சரியமாக  நமக்குள் இறங்கியிருக்கிறது. புத்தம் சரணம் கச்சாமி என்னும் வார்த்தை ஒலிகளுக்குள் நம்மையறிமால் நாம் ஒரு சாந்தம் கொள்வதில் இவ்வளவு அர்த்தங்கள்  இருக்கின்றன.

இது எல்லாவற்றையும் இலங்கை யுத்தம் நொறுக்கி விட்டது. சிங்களப்படையின் துப்பாக்கி வெடியோசைகளே இப்போது புத்தம் சரணம் கச்சாமியாக கேட்கிறது.  புத்த மதத்தைச் சார்ந்த ராஜபக்‌ஷேக்கு இந்த வெறி எங்கிருந்து வந்தது? எந்தப் படங்களையும், செய்திகளையும் பார்த்து நாம் கதறுகிறோமோ, அவைகளே  ராஜபக்‌ஷேவை குதூகலிக்க வைக்கின்றன. மதங்கள் போதிக்கும் அன்பிற்கு அரசியலிலும், அதிகாரத்திலும் இடமில்லை என்பதுதான் அந்த நாய் ராஜபக்‌ஷே  எல்லோருக்கும் சொல்லும் செய்தியாக இருக்கிறது. ஏசுவை சிலுவையில் அறைந்தது போல, பக்‌ஷே புத்தரையும் கொன்று விட்டான்.

0

சிங்கள இராணுவத்தின் வெறியாட்டத்தையும், அட்டூழியங்களையும் உலகின் கவனத்துக் கொண்டு போக வேண்டும் என்பது முக்கிய முடிவாய்ப் படுகிறது. கோரப்பல் முளைத்த ராஜபக்‌ஷேவின் முகத்தை பூமியில் வாழும் மனிதர்கள் அனைவரிடமும் அம்பலப்படுத்த வேண்டும். ஒரு சர்வதேச நெருக்கடியை இலங்கை அரசுக்குக் கொடுக்க வேண்டும். அதற்காக, ஐ.நாவிடம் முறையிடுவது சரியானதே. ஆனால் இந்த ஒபாமா வந்து தலையிட வேண்டும் என்று சிலர் வேண்டுவதுதான் சுருதி பேதமாக இருக்கிறது. இலட்சக்கணக்கில் குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் ஈராக்கில் கொன்று குவித்த வெறியன் புஷ்ஷின் நடவடிக்கையை ஆமோதிக்கிற ஒபாமா இலங்கை வந்து என்ன செய்யப் போகிறார். ஆத்திரத்தில், அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் எதோ செய்வது போல் இல்லை?

0

சென்ற வாரம் சில எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ள சில வரிகளைச் சொல்லி இவை எந்தெந்த எழுத்தாளர்கள் எழுதியவை என்று சுவராஸ்யமாய் ஒரு விளையாட்டை பதிவிட்டிருந்தேன். பின்னூட்டம் இட வந்த சண்டாளக்கவி என்பவர், இலங்கையில் இவ்வளவுக் கொடுமைகள் நடக்கும்போது, நீங்கள் என்ன கண்ணாமுச்சு ரே விளையாடிக் கொண்டு இருக்கிறீர்களா, நீங்கள் ஒரு படைப்பாளியா என்றெல்லாம் கொட்டித் தீர்த்துவிட்டுப் போயிருந்தார். பிறகு பின்னூட்டம் இடவந்த சிலர் எனக்குத் தொலைபேசியில் சொன்னதையடுத்து நான் அந்தப் பின்னூட்டத்தை எடுத்து விட்டேன். இன்னும் சிலரது பதிவுகளிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததாகவும் கேள்விப்பட்டேன். எனவே, சில விஷயங்களை மெத்த பணிவுடன் சொல்லியாக வேண்டும் எனத் தோன்றுகிறது.

இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் நம் எல்லோரையும் சித்திரவதை செய்கின்றன. நம் சிந்தனைக்குள் இருந்துகொண்டு சதா நேரமும் வலி தருகின்றன. இங்கே யாரும் இந்த வேதனையிலிருந்து தப்ப முடியாது. ஆனாலும், நம் அன்றாட வாழ்வில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டு, தூங்கி என இயங்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இவைகள் எல்லாம் கெட்டால்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. அப்படியில்லையென்றால், இங்கு ஆவேசமாகப் பேசும் அனைவரையும் பரிசோதித்தாக வேண்டும். அன்றாட வாழ்வில் கூட, சோதனைகள் நேரும்போது அதிலிருந்து சிறிது விடுபட மனம் கோருகிறது. இது மனித இயல்பு. ஒன்றும் செய்ய முடியாமல், ஆனால் எப்போதும் அதைப்பற்றி மட்டும் பேசி, சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் பைத்தியமாகத்தான் முடியும். கார்த்திகேயன் பாண்டியன்  ‘சில காகிதப்பூக்கள், காதறுந்த ஊசி’ வலைப்பூவிற்கு சென்று  பார்த்த போது காய்ச்சல் வந்தது போல் இருந்தது. தாங்க முடியவில்லை. என்னை நான் விடுவித்துக் கொள்ளவே, எழுத்தாளர்களின் துணையைத் தேடினேன். ரோம் எரியும்போது  பிடில் வாசிக்க நான் ஒன்றும் நிரோ என்னும் மன்னன் இல்லை. மாதவராஜ் என்னும் சாதாரண பிரஜை.

ஆனால், நீங்கள் இப்படித்தான் அழ வேண்டும், இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. இப்படி இருந்தால்தான் நான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவானவன்  என்று எவரும் எனக்கு சர்டிபிகேட் தரத் தேவையில்லை. இதுவும் வன்முறை, அராஜகம் என்றுதான் சொல்வேன். மன்னிக்க வேண்டும். என் வேதனையை புரியவைக்க, என் நெஞ்சைப் பிளந்தெல்லாம் காண்பிக்க முடியாது. அல்லது தீக்குளித்தெல்லாம் நிரூபிக்க முடியாது.

 

*

கருத்துகள்

40 கருத்துகள்
வருகைக்கும், வாசிப்புக்கும் நன்றி.!
  1. ///புத்தம் சரணம் கச்சாமி என்னும் வார்த்தை ஒலிகளுக்குள் நம்மையறிமால் நாம் ஒரு சாந்தம் கொள்வதில் இவ்வளவு அர்த்தங்கள் இருக்கின்றன. இது எல்லாவற்றையும் இலங்கை யுத்தம் நொறுக்கி விட்டது. சிங்களப்படையின் துப்பாக்கி வெடியோசைகளே இப்போது புத்தம் சரணம் கச்சாமியாக கேட்கிறது. புத்த மதத்தைச் சார்ந்த ராஜபக்‌ஷேக்கு இந்த வெறி எங்கிருந்து வந்தது?///

    இதேகேள்வி சதா என்னை இம்சித்துக்கொன்டிருக்கிறது.


    ///இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் நம் எல்லோரையும் சித்திரவதை செய்கின்றன. நம் சிந்தனைக்குள் இருந்துகொண்டு சதா நேரமும் வலி தருகின்றன. இங்கே யாரும் இந்த வேதனையிலிருந்து தப்ப முடியாது. ஆனாலும், நம் அன்றாட வாழ்வில் பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டு, தூங்கி என இயங்கிக்கொண்டேதான் இருக்கிறோம். இவைகள் எல்லாம் கெட்டால்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல. அப்படியில்லையென்றால், இங்கு ஆவேசமாகப் பேசும் அனைவரையும் பரிசோதித்தாக வேண்டும்.///

    சரியாச்சொன்னீங்க போங்க. வாய்ச்சொல் வீரர்கள் நிறைய பேர் இருக்கிறாங்க. விடுங்க அவங்களை.

    /// நீங்கள் இப்படித்தான் அழ வேண்டும், இப்படித்தான் சிந்திக்க வேண்டும், இப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடியாது. இப்படி இருந்தால்தான் நான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவானவன் என்று எவரும் எனக்கு சர்டிபிகேட் தரத் தேவையில்லை. இதுவும் வன்முறை, அராஜகம் என்றுதான் சொல்வேன்.///

    நமக்குள்ளான பதற்றத்தையும், அக்கறையையும் இதுபோன்றவ‌ர்களால் புரிந்துகொள்ள முடியாது மாதவராஜ். உணர்வுகள் கடந்து நல்லவிதமாக யோசித்தாலும் அவரவருடைய பீடிக்கப்பட்ட மனதுடன்தான் இவர்களுக்கு சிந்திக்கத்தெரியும்.

    த‌ங்க‌ளை முன்னிறுத்திக்கொள்ள‌ இவையெல்லாம் இவ‌ர்க‌ளுக்குத்தேவை. இவர்களைக் கடந்து சென்றுவிட‌ வேண்டியதுதான்.

    வெள்ளத்தனைய மலர் நீட்டம்...

    பதிலளிநீக்கு
  2. Sri lanka -issue>you have expressed your views-worries.You have more emotions on human sufferings.As a writer it is "Natural".But article has no analysis and conclusions.
    You can go further from the aspect of a another nation and its internal politics.we have to think about our role as a another nation and its limitations under the International rules.
    Srilanka issue is a internal issue.Ethnic issue.One sided are our past generation's origin.They are speaking "Tamil" language.They are Srilankan citizens.Not NRIs.so we have our own limitations.war and its dangerous affects and effects are common for both sides people.The humanism is suffering in both sides. The LTTE ANNIHILATED ALL Tamil speaking Leaders -own brothers-for his personal supremacy.Is it fighting for tamilians truly?To day so many ideologically deferring political parties giving support for the Tamil origin people of srilanka in one voice.But the terror LTTE did not allow the other Tamil organizations working and supporting the Tamil people's demands.They-LTTE- alone cannot be the sole representative of the Tamil people.They killed all Tami organization's leaders.
    yes when a war broken out both sides will get loss of lives.They are common in the war for both sides.So the parties and persons worrying for the human loss should give a clarion call to both sides.I am not supporting Srilankan govt. and its wrong actions.If any organisation and or persons do a riot/struggle/armed struggle against the govt.naturally any govt will start to suppress the agitation.The LTTE is not struggling for any social changes /socialist form of government or bring any communism in their land.When a opportunity to bring a peace and solutions within the constitution of srilanka it must be utilized by the organizations and perticularly by the LTTE.
    This is the only solution to the srilanka issue.No "Elam"demand will work out in a constitutionally elected govt.So anybody giving support voice should understand the realities of srilanka.will we accept for separation of "PUNJAB"-"GORGALAND'-"NAGALAND" FROM OUR COUNTRY ? LIKE THIS THE SRILANKA ISSUE.WE SHALL DEMAND TO DISCUSS THE ISSUES ACROSS THE TABLE IN THE PRESENCE OF INDIA AND UN..NO WRONG.
    Both sides thousands of women and children lost their husbands and fathers.Remember that.mere emotions will not solve the issue.war is always dangerous.war is dangerous to all people and both sides.We demand peace in the world.we need happy in the life of human.All the srilanka people must live peacefully and unitedly within the Nation.No separation.No Tamil Elam.One Srilanka- Tamil orgin people of Srilanka should be given equal rights in language,army,police,govt jobs,economically equal status,movements in the nations,houses,lands,loan facilities and political matters.
    I respect your worries of the wounds of war and sufferings of women/children.No other way to go.
    Two sides must stop war.Two sides must down the arms.Two side must come to negotiation table.The LTTE MUST ANSWER THE QUESTION>>why they killed all tamil organisations and its leaders which/who were working for the Tamil peoples of Srilanka /?
    Iknow personally Sri sabha rathinam and Mukundan AND OTHERS of TELO/PLOT ETC..Let the LTTE and Tamilnadu parties declare whether "They" are enemies of tamil speaking people in srilanka?
    Emotions will not solve the practical issues.---Selvapriyan

    பதிலளிநீக்கு
  3. முதலில் நமக்கு நாம் நடப்போம்.. இதுதாங்க என்னோட பாலிஸி..

    அடுத்தவங்க என்ன நினைக்கிறாங்க??? அதுபத்தி நமக்குத் தேவையில்லை.. அதனால்தான் நான்கூட முன்னமே சொன்னேன். ஈழத்தமிழர்னு வரும்பொழுது எனக்கு யாரோ மாதிரிதான் முதல்ல தெரிஞ்சது!! ஆனா பேனாவைக் கையிலெடுத்தப்போதான் உணர்வே வந்துச்சு!!

    சிலருக்கு செத்தாலும் மரமாத்தான் இருப்பாய்ங்க.. கண்டுக்காதீங்க!!!

    பதிலளிநீக்கு
  4. //அந்த நாசக்கார நாய் ராஜபக்‌ஷே //

    என்னதான் நமக்கு எதிரி என்றாலும் கொடூரமான கொலைகாரன் என்றாலும் நாய் என்று அநாகரீகமாக அழைப்பது தமிழன் பண்பாடு அல்லவவ!

    அவ்வார்த்தையை நீக்கும்படி தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  5. /////என் வேதனையை புரியவைக்க, என் நெஞ்சைப் பிளந்தெல்லாம் காண்பிக்க முடியாது. அல்லது தீக்குளித்தெல்லாம் நிரூபிக்க முடியாது.////

    உண்மைதான்....
    மற்றவர் வலி
    வலி வாழ்க்கையின் ஒரு பகுதி..
    வலியே வாழ்க்கையல்ல..

    பதிலளிநீக்கு
  6. //அறிவுக்குப் புரிந்தமாதிரி இருந்தாலும், உணர்வுக்கு புரியவே இல்லை என்பதைச் சொல்லியாகத்தான் வேண்டும். நேற்று விடுதலைப் புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் என்று கேள்விப்பட்டவுடன் சட்டென்று ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. திருப்பி அடிப்பது நம் மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. //

    உண்மை தான். ஆனால் விளைவுகளையும் ஆராய்ந்துள்ளீர்கள். உணர்ச்சிகரமான அதேசம‌யம் நிறைய சிந்திக்க வைக்கும் பதிவு.

    அப்புறம், ச‌ண்டாள‌க் க‌விக்குச் ச‌ரியான‌ ச‌வுக்க‌டி. :-)

    பதிலளிநீக்கு
  7. மிகைகள் அற்ற இயல்பான ஒரு மனிதரின் பதிவு. நாம் அசாதாரண வலிகளோடும் சாதாரண வாழ்க்கையோடும் இழுபறி நிலையில்தான் வாழவேண்டியிருக்கிறது. இரண்டிற்குமிடையில் சமன்பாட்டை ஏற்படுத்தவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விழியில் வழியும் கண்ணீரைத் துடைத்துவிட்டு அன்றைய சமையலைக் கவனிப்பதும், வாசிப்பதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது.

    பதிலளிநீக்கு
  8. நல்லதொரு வியாக்கியானம் ....!

    இந்தியா..!
    இந்தியா ...!
    வல்லரசான இந்தியா
    எனக்கொரு சந்தேகம்
    கொல் அரசையா
    நீங்கள் வல்லரசு என்கிறீர்கள்...?

    முழத்துக்கொரு சடலம்
    உன்னாலே என்று
    எமக்கும்
    கிழித்துப் படிக்க
    உடல் இல்லையே என்று உனக்கும்
    சரியான ஏக்கம்
    எம்மைப் போலவே உனக்கும்
    சரியான ஏக்கம.

    ஒன்றாய்தான் ஓடுகிறோம்.
    உயிர் கூட்டைக்காக்க நாமும்
    கிரிக்கெட்டை ஆட
    நீயும்
    ஒன்றாய்தான் ஓடுகிறோம்.

    இருட்டில் வாங்கிய சுதந்திரத்தைப் போலவே
    உங்கள் கொள்கைகளும்
    குருட்டுத்தனமாகவே இருக்கிறதே

    அணிசேராதது தான்
    உனது கொள்கையெனில்
    கிட்லர்களோடு
    ஒப்பந்தம் செய்தது எப்படியோ ...?

    நீ ஒரு சனநாயக நாடென்பது
    கஞ்சனுக்கு
    கர்ணன் என்று
    பெயர் வைத்ததைப் போலில்லையா ...?

    காந்தி சிலை போலவே
    உனது அறநெறியும்
    இரண்டும் தெருவிலேயே நிற்கிறது ...!

    உண்மையைச் சொல்
    ஆக்கிரமிப்பை
    நோக்கிய
    உனது நிவாரணம் கூட
    நிர்வாணத்தை மறைக்கும்
    ஆடை போலில்லையா ...?

    சாதித் தீயினையும்
    மதப் பேயினையும் மறைப்பதற்காகத் தானே
    உனது சனநாயக முகமூடி

    உன்னிடம்
    வந்து நாம்
    தஞ்சம் கேட்டது
    கசாப்புக் கடைக்காரனிடம்
    ஆடு கேட்ட அடைக்கலம் போலல்லவா..?

    நீ
    தாக்கினால் மனிதநேயம்
    உனைத்தாக்கினால் பயங்கரவாதமோ
    கோவணத்தை எடுத்து
    தலைப்பாகை கட்டியது போலிருக்கிறது
    உனது வியாக்கியானம்....!

    பதிலளிநீக்கு
  9. பதிவினை வாசிக்கும் பொழுது என் மனதை வாசித்தது போலவே உள்ளது. அது சரி, இந்த போர் எல்லோர் மனதிலும் ஒரே மாதிரியான வலியையும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பது உண்மைதான். //நம் அன்றாட வாழ்வில் பல் துலக்கி, குளித்து.......இவைகள் எல்லாம் கெட்டால்தான் நாம் அவஸ்தைப்படுகிறோம் என்று அர்த்தமல்ல// நிச்சயமான உண்மை! ஆனால் உண்மை என்பதற்காக தேடிச் சோறு நிதந்தின்பதை மட்டும் தொடர்ந்தால் எப்படி? நமது மனக் கொந்தளிப்பும், கோபமும் கொல்லப்படும் மக்களை காப்பற்றும் விதமாக எதுவும் செய்வதற்குதவாமல், நமது கையாலாகாத்தனத்தின் சாட்சியாக மட்டும் இருப்பது சரியா? விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவனை இரக்கத்தோடு பார்த்து "உச்" கொட்டிவிட்டு தன் பயனத்தை தொடர்பவர்க்கும் நமக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
    "மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ?" இங்கோ மனிதர் சாக மனிதர் பார்க்கும் அவலம்தானே தொடர்கிறது! நம் கண்ணில் வழியும் ரத்தக் கண்ணீரை ப்திவு செய்தால் போதுமா? வலியும், வேதனையும், கண்ணீரும் போராட்டமாய் வெடித்தால்தானே அமைதி மலரும். ஆறு கோடி தமிழர் வாழுமிடத்தில், கல்லூரி மாணவர்களும் மற்றும் சிலரும் மட்டும்தானே களத்தில் இறங்கி குரலெழுப்பிகிறார்கள். மற்றவர்கள் தினசரி நிகழும் மரணங்களை செய்திகளில் மேய்ந்து விட்டு மதியக் கஞ்சி கலயங்களோடுதானே திரிகிறார்கள்(றோம்??). உண்கிற உணவு மட்டுமல்ல், புகைக்கிற சிகரெட் கூட கேள்வி கேட்கிறது "என்னை சுகிக்கும் தகுதி நிஜமாகவே உனக்கு இருக்கிறதா?" என்று!
    //ஒன்றும் செய்ய முடியாமல், ஆனால் எப்போதும் அதைப்பற்றி மட்டும் பேசி, சிந்தித்துக் கொண்டிருந்தால் நாம் பைத்தியமாகத்தான் முடியும்.// வெறுமனே சிந்தித்து பைத்தியமாகாமல், செயலில் இறங்கி வெற்றியாளர்களை நம்மை உணர முடியாதா??

    பதிலளிநீக்கு
  10. /அறிவுக்குப் புரிந்தமாதிரி இருந்தாலும், உணர்வுக்கு புரியவே இல்லை என்பதைச் சொல்லியாகத்தான் வேண்டும். /
    உண்மையான வரிகள்.அப்பாவி மக்கள் (அது சிங்கள அப்பாவி குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் கூடப் பொருந்தும்) என்ன பாவம் செய்தார்கள்(எனில், போரையே வெறுப்பதாய் அர்த்தம்.)
    வெறும்,அன்பையும்,ஆதங்கத்தையும் மட்டும் வைத்துக்கொண்டு,சாமானியனாய் உழன்றுகொண்டிருப்பதும்,அவ்வப்போது ஏற்படும் உற்சாகங்களையும் வாழ்வில் அனுமதிக்கிறபோதும், கொஞ்சம் உறுத்தலாகத்தானிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  11. //நமக்குள்ளான பதற்றத்தையும், அக்கறையையும் இதுபோன்றவ‌ர்களால் புரிந்துகொள்ள முடியாது மாதவராஜ். உணர்வுகள் கடந்து நல்லவிதமாக யோசித்தாலும் அவரவருடைய பீடிக்கப்பட்ட மனதுடன்தான் இவர்களுக்கு சிந்திக்கத்தெரியும்.

    த‌ங்க‌ளை முன்னிறுத்திக்கொள்ள‌ இவையெல்லாம் இவ‌ர்க‌ளுக்குத்தேவை. இவர்களைக் கடந்து சென்றுவிட‌ வேண்டியதுதான்.

    வெள்ளத்தனைய மலர் நீட்டம்...//

    மாதவ்,

    சற்று தாமதமாகத்தான் படிக்க முடிந்தது.

    நான் சொல்ல விழைந்ததை மதுமிதா சுருக்கமாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறார்கள். என் கருத்தும் அதே.

    பதிலளிநீக்கு
  12. putham saranam katchami will be stop.only sound toomil?.right time you will elabrate this issue.

    பதிலளிநீக்கு
  13. again a good post. you are right demanding a particular style is 'showing' sympathy is arrogance

    பதிலளிநீக்கு
  14. 1/It is unbecoming of Writer Mathavaraj to call Rajabakshe as 'NaaiRajabakshe'. 2/You should have touched roll of LTTE in the sufferings of innocent Tamil children& Women. 3/Though it is an emotive issue it is also a political issue. Peace will prevail in Srilanka only through sane political dialogue.

    பதிலளிநீக்கு
  15. இலங்கைத் தமிழர்கள் குறித்த தங்களது மனிதாபிமான உணர்ச்சி தமிழகத்தில் கடை விரிக்கப்படும் தமிழ் இனவாத பிரச்சார உத்தியில் வீழ்ந்துவிட்டதோ என்றே என்னத் தோன்றுகிறது. குறிப்பாக இன்றைக்கு இலங்கை இனவாதப் பிரச்சனை குறித்து தீர்க்கமாக ஆராயும் பலரும் சுட்டிக்காட்டும் உண்மைகளில் ஒன்று. இலங்கை பேரினவாதத்தால் தமிழ் மக்கள் பாதிப்புக்கு உள்ளானதை விட புலி பயங்கரவாதத்தால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதையும், தற்போதைய சம்பவங்கள் நிரூபிப்பது கூட, தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகள் அப்பாவி தமிழ் மக்களை கவசமாக பயன்படுத்துவது மட்டுமல்ல; 12 வயது சிறுமிகள் உட்பட பச்சிளம் குழந்தைகளைக் கூட மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தி முல்லைத் தீவில் முடங்கிப்போனவர்கள் ஈழத்தை வெற்றிக் கொள்ள விமானத்தை ஏவிக் கொண்டிருக்கின்றனர். யாழ்பாணத்திலே "புலிகளே அப்பாவி மக்களை விடுதலை செய்" என்ற தமிழ் மக்களின் புலிகளுக்கு எதிரான ஆவேச முழக்கம் தமிழகத்தில் இருட்டடிப்பு செய்யப்பட்டது. பிரச்சனை புலிகளைப் பற்றிய ஆராய்ச்சி மட்டுமல்ல; தமிழ் மக்களின் ஒட்டுமொத்த பாதுகாப்பும் குறித்துதான். யாருக்கோ போர் புரிகிறோம் என்று சொல்கிறார்களோ இன்று அவர்களையே ஒட்டுமொத்தமாக அழிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறது எல்.டி.டி.இ. எனவே உணர்ச்சி வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட தமிழக அரசியல்வாதிகள் கூட இன்றைக்கு பிரபாகரன் ஓர் சர்வாதிகாரி - பயங்கரவாதி என்று முத்திரைக் குத்தி அடையாளம் காட்டும் தருணத்தில், இந்த கட்டுரை உணர்ச்சியின் விளிம்பில் உண்மையை தேட மறுப்பது வருத்தமளிக்கிறது.

    கீழ்க்கண்ட பதிவையும் படிக்கவும்.

    http://santhipu.blogspot.com/2009/02/blog-post_8815.html

    பதிலளிநீக்கு
  16. //நேற்று விடுதலைப் புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் என்று கேள்விப்பட்டவுடன் சட்டென்று ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. திருப்பி அடிப்பது நம் மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாசக்கார நாய் ராஜபக்‌ஷே இந்தக் கோபத்தையெல்லாம் நம் அப்பாவி மக்கள் மீதுதானே காண்பிப்பான் என்று சிந்தனை வந்தபோது கலக்கமாய் இருந்தது. இருக்கிறது. காலம் நம்மை வேடிக்கை பார்க்கிறது.//

    எந்த வரலாற்றின் பக்கத்தில் நாம் நின்று கொண்டு பேசுகிறோம். என்பதை பொருத்துதான் வரலாறும் நம்மை மன்னிக்கும் . நீங்களே மிக எளிதாக புலிகளின் சாகசங்களில் மூழ்கதுடிக்கும்போது சாதாரன மக்களின் மன நிலை எப்படி இருக்கும். நடந்து கொண்டு இருக்கிற மனித படுகொலைகள் புலிகளின் இருப்பில் உள்ளதை லாவகமாக மறந்துவிட்டீர்களா? சிங்கள இனவெறி எதன் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது தங்களுக்கு தெரியாதா? பக்சே நாய் என்றால் பிரபாகாரன் பேய் அல்லவா?

    //இங்கு ஆவேசமாகப் பேசும் அனைவரையும் பரிசோதித்தாக வேண்டும்.//
    மிகப் சரியானது

    பதிலளிநீக்கு
  17. this is called Diamond cuts diamond..so far there were no equal to Praba from Singalese side..now a person like Praba appeared on singalese side...and the War turned ugly side..
    numerical superiority is determining the outcome of this war..
    the only difference between ltte and SLA is arms and # of personnel.
    and better equipped is winning the war.
    there is no place for commong man's tears....
    OBEY the WINNER whether it is LTTE or SLArmy

    பதிலளிநீக்கு
  18. மதுமிதா!

    //இவர்களைக் கடந்து சென்றுவிட‌ வேண்டியதுதான்.//

    மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  19. விமலா வித்யா!

    உங்கள் விவாதங்கள் பல விஷயங்களை புரிய வைப்பதாக இருக்கின்றன.

    நிதர்சனமான, ஆழமான உண்மைகள் பிரச்சினையின் சிக்கல்களை தெளிய வைக்கின்றன.

    ஆனால் உயிர்வதை பார்த்து, உணர்ச்சிவசப்படும் மக்கள் இந்த நிதானத்தையே வெறுக்கிறார்கள். சந்தேகிக்கிறார்கள்.

    எல்லோருக்குள்ளும் சட்டென்று உணர்ச்சிவசப்படும் சாதாரண மனிதர்களும் இருக்கிறார்கள். பக்குவம் பெற்ற மனிதர்களும் இருக்கிறார்கள். இந்த இரண்டு நிலைக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் இந்த நேரத்தின் மிக முக்கியமானவை என்று நினைக்கிறேன்.
    அதுதான் உண்மைகளைத் தேடுவதற்கான வழியென்றும் அறிகிறேன். அதன் விளைவுதான் இந்தப் பதிவு.

    பதிலளிநீக்கு
  20. ஆதவா!

    நாயென்று சொல்லியிருக்கக் கூடாதுதான்.

    பதிலளிநீக்கு
  21. தீபா!

    தமிழ்நதி!

    உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கும் ,பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  22. தீபா!

    தமிழ்நதி!

    உணர்வுகளைப் புரிந்து கொண்டதற்கும் ,பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  23. பொன்ராஜ்

    இந்திய அரசின் மீதுள்ள கோபம் என்று தெரிகிறது. ஆனால் தெளிவற்று ஒலிக்கிறதே....

    பதிலளிநீக்கு
  24. Anonymous!

    என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள்.

    பதிலளிநீக்கு
  25. முத்துவேல்!

    வடகரைவேலன்!

    சேலத்து முத்தையா!

    தங்கள் வருகைக்கும், பக்ர்வுக்கும் மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
  26. ksubbram!

    //It is unbecoming of Writer Mathavaraj to call Rajabakshe as 'NaaiRajabakshe'//

    sorry.

    பதிலளிநீக்கு
  27. சந்திப்பு!

    // திருப்பி அடிப்பது நம் மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாசக்கார ராஜபக்‌ஷே இந்தக் கோபத்தையெல்லாம் நம் அப்பாவி மக்கள் மீதுதானே காண்பிப்பான் என்று சிந்தனை வந்தபோது கலக்கமாய் இருந்தது. இருக்கிறது. //

    இதில் விடுதலைப்புலிகளை ஆதரிக்கும் தொனியா இருக்கிறது. விடுதலைப்புலிகளையும் குற்றஞ்சாட்டும் புரிதல் மேலோங்கி வருவதாகவே நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  28. விடுதலை!

    விமலா வித்யா அவர்களுக்கும்,சந்திப்பு அவர்களுக்கும் சொன்னதைத்தான் உங்களுக்கும் சொல்ல முடியும்.

    பதிலளிநீக்கு
  29. வெத்துவேட்டு!

    //there is no place for commong man's tears....//

    சுடும் வேட்டு.

    பதிலளிநீக்கு
  30. //நேற்று விடுதலைப் புலிகளின் விமானம் கொழும்பில் தாக்குதல் என்று கேள்விப்பட்டவுடன் சட்டென்று ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. திருப்பி அடிப்பது நம் மனித சுபாவத்தில் அப்படியொரு ஆர்ப்பரிப்பை ஏற்படுத்துகிறது. கொஞ்ச நேரம் கழித்து, அந்த நாசக்கார நாய் ராஜபக்‌ஷே இந்தக் கோபத்தையெல்லாம் நம் அப்பாவி மக்கள் மீதுதானே காண்பிப்பான் என்று சிந்தனை வந்தபோது கலக்கமாய் இருந்தது. இருக்கிறது. காலம் நம்மை வேடிக்கை பார்க்கிறது.//

    இதுதான் நிதர்சனம்.
    எங்களைப்போலவே மனம்கொதித்து புலம்பித் தள்ளியிருக்கிறீர்கள்.
    என்னையும் சிலர் விமர்சிக்கிறார்கள்.எங்களை என்ன செய்யச் சொல்கிறார்கள்!

    பதிலளிநீக்கு
  31. நல்ல வேளை உங்களுக்காவது முத்துக்குமரனின் மரணத்தின் பின் உள்ள அரசியல் புரிந்ததே! நீங்களும் முத்துக்குமரன் மரணம் ஏதோ அரசியல் தலைவர்களின் தூண்டுதல் என்று பாய்ண்ட் பாய்ண்டாக எழுதிவிட்டு இங்கு வந்து கடந்து செல்லச் சொல்லவில்லையே. அதற்கு நன்றிகள்!!

    பதிலளிநீக்கு
  32. satham konda maranamgal kanda udan manam thelintha ashokan pinbu buthamatham thazhuvinan indro buthamatham nelavum nattil nithamum olam avalam .....andru ashokan indru sigalavan...endru thaniyum intha suthanthira dhagam....

    பதிலளிநீக்கு
  33. theeratha pakkamgal ithai ezhutha pothadhu pakkamgal

    பதிலளிநீக்கு
  34. தமிழரசி!

    தங்கள் வருகைக்கும், பகிர்வுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  36. sorry...

    தவறுதலாக அண்ணாச்சிக்கு எழுதிய பின்னூட்டம் இங்கே வந்துவிட்டது...

    பதிலளிநீக்கு
  37. அன்புள்ள மாதவராஜ்,

    வணக்கம்.

    இலங்கைத்தமிழர் போராட்டம் பற்றிய உங்கள் பதிவைப் பார்த்தேன்.

    சமூகம் பற்றியும் , சினிமா பற்றியும் , காதல் பற்றியும் நிறைய பதிவுகளை செய்து கொண்டிருக்கும் நீங்கள் போகிற போக்கில் இனப்படுகொலை , இலங்கை ,இலங்கைத் தமிழர் இவர்களுக்காகவும் தலா 1 எனும் வீதம் ஒரு பதிவை செய்திரக்கிறீர்கள்.

    நானறிந்து தமுஎச சிந்தனையாளரின் தமிழ் ஈழம் குறித்த முதல் இணையதள பதிவு இது என நினைக்கிறேன்.

    சிபிஎம்கட்சி ஈழ பிரச்சினை குறித்து என்ன சிந்திக்கிறதோ அல்லது தன்னுடைய தோழர்கள் என்ன சிந்திக்க வேண்டும் என்று வழியுறுத்துகிறதோ அதிலிருந்து ஒரு இம்மியும் பிசகாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறீர்கள்.

    சிபிஎம் விருப்பம் இதுதான்,

    1.பிரபாகரன் மீதும் எல்டிடிஈ மீதும் வெறுப்பைப் பரப்ப வேண்டும்

    2. அங்கு நடக்கிற படுகொலைகள்எல்லாம் பிரபாகரன் ஆயுதம் எடுத்ததன் பதில் வினை தான் என்ற எண்ணத்தை ஏறபடுத்த வேண்டும்.

    3. தமிழ் அல்லது தமிழர் என்று பேசுகிறவர்களெல்லாம் சுயலாபத்திற்காக பேசுகிறவர்ளே அல்லாமல் அவர்கள் அறிவுள்ளவர்களோ , போராளிகளோ அல்லது தியாக சிந்தனை உள்ளவர்களோ அல்ல என்ற எண்ணத்தை உண்டாக்க வேண்டும்.

    சிபிஎம்மின் இந்த மூன்று விருப்பமும் உங்களுடைய பதிவில் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

    உங்களுடைய இந்தப் பணியின் விளைவாக மொத்தத் தமிழினம் அழிந்து போனாலும் நாளை அமைய இருக்கும் இந்திய சோஷலிஷ அரசாங்கம் உங்களுக்கு மிக உயரிய பதவியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

    நான் உங்களை சுய சிந்தனை உள்ளவர் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் எல்லா சிபிஎம் காரர்களைப் போலவே சிந்திக்கிற வேலையை பொலிட்பீரோவிற்கு கொடுத்து விட்டு, சிபிஎம்மின் சிந்தனை அடி ஆளாக செயல் படுகிற நபராக இருக்கிறீர்கள்.

    நீங்கள் எடுத்திருக்கும்¢ இந்த முடிவுகள் நீங்கள் உங்களின் சுயவாசிப்பில் எடுத்த முடிவுகளா அல்லது உங்களது கட்சியினரும் உங்களுடைய கட்சிப் பத்திரிக்கையும் உங்களுக்கு போதித்த விஷயங்களா என்பதை உங்களுடைய மனசாட்சியிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

    மனசாட்சி எப்பொழுது வேலை செய்யும் என்பது பலருக்கும் மறந்து போன விஷயம்.மனைவியோடு படுத்திருக்கும் போதும் கூட பலர் மனசாட்சியற்றே படுத்திருக்கிறார்கள். உங்கள் குழந்தைகளை நீங்கள் மடியில் வைத்திருக்கும் தருனமே மனசாட்சி வேலை செய்யும் தருனம். அந்தத் தருனத்தில் மேல்கண்ட கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள்.

    நீங்கள் உங்ளுடைய சுயதேடலில் தான் இந்த முடிவிற்கு வந்திருக்கீறீர்கள் என்றால் பாராட்டுக்கள். இதன் விளைவுகளை பொறுத்திருந்து பார்த்துக் கொள்வோம். ஆனால் வெறுமனே கட்சி ஏற்படுத்துகிற நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்த முடிவிற்கு வந்தீர்கள் என்றால் தயவு செய்து இலங்கை வரலாற்றை கொஞ்சம் வாசித்துப் பாருங்கள்.. ..

    ராஜபக்ஷே மட்டும் அங்கே படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கவில்லை.
    உங்களைப் போன்ற ஈழ போராட்டத்திற்கு எதிர் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறவர்களும்தான் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் மற்றும் தமிழ்ச்செல்வன் போன்ற தோழர்கள் இது குறித்து நேர்மையாக வாசிக்கா விட்டால், யோசிக்கா விட்டால் சிபிஎம்மில் வேறு யாரும் இதனை செய்து விடுவார்கள் என்று நான் நம்பவில்லை.

    நானறிந்து , ஈழ வரலாறு குறித்து மிக எளிய தகவல் கூட தெரியாதவர்களே அதற்கு எதிரான பிரச்சாரத்தில் தீவிரமாக இருக்கிறவர்களாக இருந்து வருவதைப் பார்க்கிறேன். என்ன செய்ய? இங்கு ஒவ்வொருவரும் தான் விரும்பியதை , தனக்கு வசதியானதை நம்பிக் கொள்கிறவர்களாகவும், அதற்கேற்ற படியான செய்திகளை சேகரித்துக் கொள்கிறவர்களாகவும் இருக்கிறார்களே தவிர தன் முனைப்பில் உண்மையை தேடுகிறவர்களாக இல்லை.

    குஜராத்தில் முஸ்லிம்களை கொள்வதற்கு பிஜேபி மற்றும் நரேந்திரமோடிகளால் ஆயிரம் காரணங்களை சொல்லமுடிகிறது என்பதைப் போல உங்களாலும் தமிழர்கள் அங்கே கொல்லப்படுவதற்கு ஆயிரம் காரணங்கள் சொல்ல முடிகிறது

    ஆனால் ஈழ வரலாற்றின் உண்மையை அறியும் போது, அவர்களுக்கு இழைக்கப் படுகிற அநீதியை உணரும் போது , ஒருவன் தன்னுடைய உடலை உயிரை வாழ்க்கையை இந்தப் போராட்டத்திற்கான ஆயுதமாக பயன்படுத்தத் தயங்க மாட்டான் என்பதுதான் சமீபத்திய முத்துக்குமரன்,ரூபன்,சிரித்திரன் இவர்களின் மரணம் உணர்த்தும் உண்மை.

    ஓரே நாளின் முந்தைய பொழுதில் ஈழத்தமிழர் குறித்து வறுத்தப் பட்டு விட்டு மறுபொழுதில் வேறு விளையாட்டுக்கு சென்றுவிட்ட உங்களை ஒரு ஈழத்தமிழர் கோபித்துக் கொண்டதற்காக நீங்கள் கடுமையாக பொங்கி எழுந்திருக்கிறீர்கள்.

    ஓரே திரைப்படத்தில் காமெடி, சண்டை , ரசமான காதல் காட்சி, மனதை உறுக்கும் காட்சி என எல்லாவற்றையும் எதிர்பார்க்கும் ஒரு பாமர ரசிகன் போல , இங்கிருக்கிற மத்தியத்தர வர்க்கத்திற்கு ஒரே நாளில் சோகம், விளையாட்டு ,வேடிக்கை,எல்லாமும் தேவைப் படுகிறது. அது அவருக்குப் புரியவில்லை . பாவம்.உங்களைப் போல கேளிக்கைக்காக அல்லாமல் இணைய தளங்களை போராட்டக் களமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிற அப்பாவி ஈழத்தமிழர்களில் ஒருவர் அவர்.

    கடைசியாக ஒரு விசயத்திற்காக நான் உங்களை மிகவும் பாராட்ட வேண்டும்.

    ராஜபக்ஷேவை கோபத்தில் நீங்கள் நாய் என்று திட்டியதும், அதை தவறு என்று ஒருவர் சுட்டிக்காட்டியதும், அதை நீங்கள் உடனடியாக திருத்திக் கொண்டதும் மனிதாபிமானத்தின் உச்சக்கட்ட காட்சிகள்.

    இதற்காக தமிழ் சமூகம் உங்களை என்றென்றும் நன்றியுடன் நினைத்துக் கொண்டிருக்கும்.

    அன்புடன்
    பிரபாகர்.

    பதிலளிநீக்கு
  38. பிரபாகர்!

    comment moderate செய்யப்பட்டு இருந்ததால், இன்றுதான் உங்கள் பின்னூட்டத்தை பார்க்க முடிந்தது.மன்னிக்கவும்.

    தாங்கள் கொண்ட கருத்துக்கு மாற்றுக் கருத்து இருந்தால், வரலாறு தெரியாது எனவும், சுயசிந்தனையற்றவர்கள் எனவும் மிக எளிதாக குத்துவதற்கு முத்திரைகள் தயாராக இருக்கும் எனபதை அறிவேன்.

    வரலாற்றை எங்கிருந்தும் ஆரம்பித்து பேச தயாராகவே இருக்கிறேன். மலையக மக்களின் வாழ்வுரிமைப் போராட்டத்திலிருந்து, ஈழத்தில் நிலவிய சாதீயமும் அதற்கெதிரான போராட்டங்களிலிருந்து, அப்போது இடதுசாரிக் கருத்துக்களோடு முன்வந்த இளைஞர் பட்டாளத்திலிருந்து, அது தமிழ் தேசீய இயக்கமாக உருவெடுத்ததிலிருந்து, விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கிருந்து ஆயுதம் தாங்கி தனி ஈழத்தை முன்வைத்து நகர்ந்ததிலிருந்து, சக போராளிகளையும் ஜனநாயக சிந்தனையாளர்களை கொன்றதிலிருந்து, தான் மட்டுமே ஒரே தமிழர் காக்கும் அமைப்பாக மார்தட்டிக் கொண்டதலிருந்து எங்கு வேண்டுமானாலும் ஆரம்பித்து பேசலாம்.

    இவையெல்லாம் உங்களைப் போன்றவர்களோடு தொடர்ந்து நடத்தி வரும் உரையாடல்களாலும், வரலாறு குறித்து எதோ தெரிந்து வைத்திருப்பதாலும் எனக்குள் ஏற்பட்டிருக்கும் எண்ணங்களே!


    உண்மைகள் சுடும்போது அதைத் தாங்கித்தான் ஆக வேண்டும்.

    எங்களைப் போன்றவர்களுக்கு வேறு சிந்தனைகளும் வரும்போது, தாங்கள் இருபத்து நான்குமணி நேரமும், இதுபற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதற்கு எனது பார்ராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    கண்முன் நிகழும் காட்சிகளால் சட்டென்று கொதிக்கிற உணர்ச்சிவசப்படும் மனநிலைக்கும், பின் காட்சிக்கும் பின்னால் உள்ளவைகளை ஆராய்ந்து தெளியும் அறிவுக்குமான உரையாடலை, நான் என்னை முன்வைத்து எழுதிய பதிவுதான் இது.அதுதான் நாய் என்னும் வார்த்தையாக வெளிப்பட்டு,பின் திருத்திக்கொள்ளப் பட்டது.

    //ராஜபக்ஷே மட்டும் அங்கே படுகொலைகளை நிகழ்த்திக் கொண்டிருக்கவில்லை.
    உங்களைப் போன்ற ஈழ போராட்டத்திற்கு எதிர் பிரச்சாரத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருக்கிறவர்களும்தான் படுகொலைகளை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.//

    விடுதலைப்புலிகளை உங்களைப் போன்றவர்கள் ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதால்தான் இந்தப் போரும், இந்தப் படுகொலைகளும் என்று சொல்ல நேரமாகாது நண்பரே!

    பதிலளிநீக்கு
  39. Dear madhavaraj sir,
    You have rightly given a suitable reply to Mr.Prabhakaran.Good.That's all.No end===Selvapriyan

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கலாமே!