-->

முன்பக்கம் , � அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்

அத்வானியின் ஜோக்கும், புதுமைப்பித்தன் கதையும்

advani

 

நேற்று பத்திரிக்கையில் அந்தச் செய்தியைப் படித்ததும் எனக்கு ஒரு கதை ஞாபகத்திற்கு வந்தது. எப்போது படித்தாலும் சிரிப்பு வரக்கூடியது. புதுமைப் பித்தன் எழுதியது. அவருடைய நடையில் அதைப் படிக்க வேண்டும். அல்லது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொல்லக் கேட்க வேண்டும். எனவே கதைச்சுருக்கம் மட்டும் சொல்கிறேன்.

ராமர் வயோதிகம் அடைந்து அயோத்தியில் இருப்பார். அனுமனும் அங்கேயே ஊழியம் செய்து கொண்டிருபார். உடலெல்லாம் பேன்கள் அடர்ந்து இருக்கும். எப்போதும் சொறிந்து கொண்டே இருப்பார்.

முன்னைப் போல தன்னை யாரும் மதித்து போற்றவில்லையே, தனது பராக்கிரமங்களை மக்கள் மறந்து விட்டார்களே என்ற ஆதங்கம் ராமருக்கு வந்துவிடும். மன உளைச்சலில் வாடுவார். அனுமனும்  ராமரும் இது குறித்து விவாதிப்பார்கள்.

மீண்டும் சீதையை யாராவது தூக்கிக்கொண்டு போக மாட்டார்களா, நாமும் காட்டுக்குச் சென்று, போர் தொடுத்து நமது மகிமையை நிலைநாட்ட மாட்டோமா என்று திட்டம் போடுவார்கள். சரி, சீதையை யார் இப்போது தூக்கிக் கொண்டு போவார்கள் என்று கவலை வந்து விடும்.

விழுந்து விழுந்து சிரிக்கும்படியாய் கதை இப்படியே போகும். தேடிப் பிடித்துப் படியுங்கள்.

சரி... பத்திரிக்கையில் படித்த அந்தச் செய்தி என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

முன்னர் சீரியஸாக இருந்தது,  இப்போது ஜோக்காகத் தோன்றுகிறது.  நாயகனாயிருந்தவரை வில்லனாக்கி கடைசியில் காமெடியனாகவும் மாற்றி விடுவார்கள் போல. ராமன் எத்தனை ராமனடி?

 

*

பி.கு:

இது எனது 100 வது பதிவு. இந்த சிறு சந்தோஷத்தை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். நன்றி.

 

*

Related Posts with Thumbnails

28 comments:

 1. 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள். இதுபோல் இன்னும் பல நூறு பதிவுகளை கொடுத்து எங்களை மகிழ்விக்கவும்.

  புதுமைப்பித்தன் கதை சூப்பர்.

  ReplyDelete
 2. அன்பின் மாதவராஜ்

  நல்வாழ்த்துகள் - நூறாவது பதிவிற்கு

  நேற்று அலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றும் ( இருவருமே ) - இயலவில்லை. இன்று பேசுகிறேன்.

  மேன்மேலும் பதிவுகள் இட நல்வாழ்த்துகள்

  ReplyDelete
 3. 100 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. மாதவ்,

  சதத்திற்கு வாழ்த்துக்கள். இன்னும் பலனூறு படைக்க வேண்டும் நீங்கள்.

  ReplyDelete
 5. Hi

  We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

  Please check your blog post link here

  If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

  Sincerely Yours

  Valaipookkal Team

  ReplyDelete
 6. வாழ்த்துக்கள் அண்ணா

  ReplyDelete
 7. 100 வது பதிவுக்கு வாழ்த்துக்கள், ரொம்ப சந்தோசம், பிளாக் டிசைன் super ,

  ReplyDelete
 8. Uncle!

  Congratulations!
  எல்லோரும் கூறியிருப்பதையே நானும் வழி மொழிகிறேன். இன்னும் பலனூறு அசத்தலான படைப்புக்கள்
  படைக்கவும் என் போன்றவர்களை வழிந‌டத்தவும் வேண்டுகிறேன்.

  என‌க்கும் அந்த‌க் க‌தை ப‌டிக்க‌ணும் போல‌ இருக்கு.

  ReplyDelete
 9. நல்வாழ்த்துகள்!!!!

  அசத்தலான படைப்புக்கள்....
  பல நூறு கொடுத்து எங்களை மகிழ்விக்கவும்!!!

  ReplyDelete
 10. புதுமையாகத்தான் இருந்தது.... பித்தனின் கதை.....

  நூறாவது ப்திவுக்கு வாழ்த்துக்கள் சாரே!!

  தொடர்ந்து எழுதுங்கள்

  ReplyDelete
 11. ஆனா, பு.பித்தன் கதையை நீங்க முழுசா கொடுத்திருக்கலாமே... நான் இன்னும் அதைப் படித்ததில்லை...

  அன்புடன்
  ஆதவன்

  ReplyDelete
 12. மாதவராஜ்,உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.100 ஆவது பதிவின் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. ஹா ஹா, ரசித்தேன்.

  சதம் போட்டதற்கு வாழ்த்துகள் மாதவ். இன்னும் பல சதங்களுக்கு வாழ்த்துகள்.

  அனுஜன்யா

  ReplyDelete
 14. உங்கள் படைத்தலும் பகிர்தலும் தொடரட்டும் தோழரே!!

  வாழ்த்துக்கள்


  தோழமையுடன்

  முகமது பாருக்

  ReplyDelete
 15. நீண்ட இடைவெளிக்கு மன்னிக்கவும் மாதவ்.

  நிச்சயம் பல நூறு படைப்பீர்களென்ற வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
 16. கலக்கிறீங்க... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. வாழ்த்துக்கள், மேன்மேலும் பதிவுகளை எழுதுங்கள். இந்த ராமரின் கதையை படிக்கும் போது வில்லோடு பட்டாபிசேக கோலத்தில் இருக்கும் ராமனின் பிம்பம் உடைந்துபோனது.
  இன்றைய அரசியல் சூழ்னிலைக்கும் பொருந்துகிறது(போர் செய்து அதன் மூலம் தேர்தலை சந்திக்கும் உத்தி).

  ReplyDelete
 18. முரளிக்கண்ணன்!
  சீனா!
  தங்கராசா ஜீவராசா!
  வடகரை வேலன்!
  வலைப் பூக்கள்!
  ஸ்மைல்!

  அனைவருக்கும் என் நன்றிகள். நீங்கள் எல்லோரும் அருகிலேயே இருக்கிறீர்கள் என்பது உற்சாகம் தருகிறது.

  ReplyDelete
 19. ஜீவா!

  சின்னக் குழந்தை மரப்பாச்சி பொம்மைக்கு ஆடையணிந்து திருப்தியுறாமல் தவிப்பது போல நான் இருக்கிறேன். வலைப்பக்கம் திருப்தியாகி விட்டதா உங்களுக்கு.நன்றி.

  ReplyDelete
 20. தீபா!

  ஆதவா!

  அந்தக் கதை என்னிடம் இல்லை. எழுத்தாளர். ராமகிருஷ்ணனின் அண்ணன் வெங்கடாசலம் அவர்கள் இங்கே ஹோமியோபதி டாக்டராக இருக்கிறார். அவரிடம் இருக்கிறது. வாங்கி பதிவில் போடுகிறேன்.

  ReplyDelete
 21. பொன்ராஜ்!
  ஹேமா!
  முகமது பாருக்!
  கவின்!
  கும்க்கி!

  அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.

  ReplyDelete
 22. அனுஜன்யா!

  உங்கள் ரசிப்பிற்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 23. சோமசுந்தரம்!

  பிம்பங்கள் உடைந்தனவா! அப்படியானால் புதுமைப் பித்தன் படைப்பு வெற்றி!

  ReplyDelete
 24. Dear Madhu
  Wishes for your 100th article. Kindly acknowledge my wishes and at the same time requesting you to forward the TAMIL fonts at the earliest. thank you.

  ReplyDelete
 25. நாராயணன்!

  வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 26. நூறுக்கு வாழ்த்து; கதைக்கு நன்றி!

  ReplyDelete
 27. dear madhavaraj sir ! vanakkam.My congrats to you. your efforts are well designed.Happy.At the same time my humble opinion is kindly reduce the quantum of your writings.Take more time on selecting issues /topics.You will realize many things in the gap---selvapriyan

  ReplyDelete
 28. KINDLY SEE THE FONT CHANGES TO DAY MORNING IN YOUR BLOG>>®¤à¯� கஙà¯�கை஠•à¯�கரை சà¯�டலை஠®à®¾à®Ÿà®©à¯�"
  Bangalore, Karnataka arrived from tamilmanam.net on "தீராத பகà¯�கங௠�களà¯�: à®’à®°à¯� செடியà¯�à®®à¯� மூனà¯�à®±à¯� பூகà¯�க஠³à¯�à®®à¯�"
  New Delhi, Delhi arrived from google.co.in on "தீராத பகà¯�கங௠�களà¯�: பெணà¯�ணினà¯� அநà¯�தர஠™à¯�கதà¯�à®¤à ¯ˆ எடà¯�டிபà¯� பாரà¯�கà¯�க அனà¯�மதி"
  Chennai, Tamil Nadu arrived from tamilish.com on "தீராத பகà¯�கங௠�களà¯�: நினைகà¯�க மறநà¯�த தமிழà¯�à® šà¯�à®šà®¿à®©à®¿à ®®à®¾; சொலà¯�ல மறநà¯�த தமிழà¯�à® •à¯�à®•à®µà®¿à®žà ®°à¯�களà¯�"
  Singapore arrived from tamilish.com on "தீராத பகà¯�கங௠�களà¯�: நினைகà¯�க மறநà¯�த தமிழà¯�à® šà¯�à®šà®¿à®©à®¿à ®®à®¾; சொலà¯�ல மறநà¯�த தமிழà¯�à® •à¯�à®•à®µà®¿à®žà ®°à¯�களà¯�"
  Dubai left "தீராத பகà¯�கங௠�களà¯�: பெணà¯�ணினà¯� அநà¯�தர஠™à¯�கதà¯�à®¤à ¯ˆ எடà¯�டிபà¯� பாரà¯�கà¯�க அனà¯�மதி" via nunippul.blogspot.com
  Dubai arrived from kusumbuonly.blogspot.com on "தீராத பகà¯�கங௠�களà¯�: பெணà¯�ணினà¯� அநà¯�தர஠™à¯�கதà¯�à®¤à ¯ˆ எடà¯�டிபà¯� பாரà¯�கà¯�க அனà¯�மதி"
  Watch in Real-Time
  KINDLY CORRECT THIS IMMEDEATELY
  ----SELVAPRIYAN-CHALAKUDY

  ReplyDelete