பிரதீபா பாட்டீல் அவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதும் இப்படித்தான் எதோ ஒரு புகாரை கூறி, அவர் ஜனாதிபதியாகக் கூடாது என்று பிரச்சாரம் செய்தார்கள் அவர்கள். அவ்வளவு தூரம் எதற்கு? இதோ பக்கத்தில், கன்னியாகுமரித் தொகுதியில் சென்ற பாராளுமன்றத் தேர்தலின் போது தங்களை எதிர்த்து நின்ற வேட்பாளர் பெல்லார்மின் அவர்கள் மீது கூட, பொய்யான அவதூறும், களங்கமும் கற்பித்து அவர் வேட்பாளராக நிற்கும் தகுதியற்றவர் என பெரும் அமளி செய்தனர். பிறகு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்பது தெளிவானது.
இப்போது தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா மீது தாக்குதலை ஆரம்பித்து இருக்கிறார்கள். இரண்டு வருடங்களுக்கு முன்பே அவர் மீது பொய்யான புகார் அளித்து, அதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாமல் விழித்தனர். தக்க சமயத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் கோபால்சாமி, அவர்கள் சொன்னக் கருத்தையே வெளியிட்டு, நவீன் சாவ்லாவை பொறுப்பிலிருந்து நீக்க பரிந்துரை செய்கிறார். அதைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு திரும்பவும் தங்கள் பரிவாரங்களோடு புறப்பட்டிருக்கிறார்கள் அவர்கள். நவீன் சாவ்லா, காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவானவர் என்று அம்பறாத்துணியிலிருந்து அடுத்த கணையை வீசுகின்றனர். இதுபோன்ற பொறுப்புக்கள் ரொம்ப புனிதமானவை என்றும், மாசு மருவற்றவர்களே அதில் அமர வேண்டும் என்றும், கட்சிகளுக்கு அப்பாற்பட்டு இருக்கவேண்டும் என்றும் புழுதி பறக்க தேரை ஓட்டுகின்றனர்.
இதைச் சொல்வதற்கு என்ன தகுதி அவர்களுக்கு இருக்கிறது என்றுதான் தெரியவில்லை. முன்னாள் சீப் ஏர் மார்ஷல் திப்னஸ் வரை, இதுவரை எத்தனை உயர் இராணுவ அதிகாரிகள் ஓய்வு பெற்ற பிறகு பா.ஜ.கவில் சேர்ந்துள்ளனர் என்றால் ஒரு பட்டியலே நீளும். கார்கில் போரின் போது, மே6, 2000ல் கூடிய பா.ஜ.க தேசீய செயற்குழுவில், இராணுவ நடவடிக்கைகளுக்கான தலைமை இயக்குனர் எம்.சி.விஜ் மற்றும் உதவி ஏர் மார்ஷல் எஸ்.கே.மாலிக் ஆகிய இருவரும் கலந்து கொண்டதை எல்லோரும் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருக்கக் கூடும்.
தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் எல்லா ஒழுக்கங்களும் தன்னியல்பாக அவர்களிடம் இருப்பதாகவும், வேண்டாதவர்கள் என்றால் சகலக் கேடுகளும் சூழ்ந்தவர்களாகவும் சித்தரிப்பது அவர்களது தேசீய செயல் திட்டத்திலேயே இருக்க வேண்டும். இந்த அமைப்பின் அதிகார மையத்தில், தங்கள் செல்வாக்கை நுழைப்பதற்கு எச்சில் ஒழுக நாக்கைத் தொங்கவிட்டு நிற்கும் அவர்களின் மூச்சிறைப்பு, வரலாறு தெளிந்தவர்க்க்கு எளிதாக பிடிபடும். இந்தப் புள்ளியில்தான் நவீன் சாவ்லாவின் இடத்தைத் தீர்மானிக்கின்றனர்.
அரசாங்க ஒற்றர்கள் மூலமாக மரத்தில் பேய் இருப்பதாகவும், பிசாசு இருப்பதாகவும் சொல்லி மக்களை நம்பவைக்கிற யுக்தி அர்த்த சாஸ்திரத்தில் இருக்கிறது. அதன்படியே-


தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் எல்லா ஒழுக்கங்களும் தன்னியல்பாக அவர்களிடம் இருப்பதாகவும், வேண்டாதவர்கள் என்றால் சகலக் கேடுகளும் சூழ்ந்தவர்களாகவும் சித்தரிப்பது
ReplyDeleteலெனின் காலத்திலிருந்து கம்யுனிஸ்ட்கள் கடைப்பிடித்து வரும் யுக்தி.ஒபாமா தன் குழுவில் சோனால்
ஷாவைச் சேர்த்துக் கொண்ட பின்
அவர் மீது அபாண்டமாக பழி
சுமத்தியவர்கள் யார்?.
\\இந்த அமைப்பின் அதிகார மையத்தில், தங்கள் செல்வாக்கை நுழைப்பதற்கு எச்சில் ஒழுக நாக்கைத் தொங்கவிட்டு நிற்கும் அவர்களின் மூச்சிறைப்பு, வரலாறு தெளிந்தவர்க்க்கு எளிதாக பிடிபடும். \\
ReplyDeleteநச்
இந்த நிலையில் யார் இந்த நவீன் சாவ்லாடூ அவர் மீதான குற்றச்சாட்டு என்ன என்பது பற்றி பார்ப்போம்.
ReplyDeleteஇந்திய சுதந்திரத்தின் கருப்பு நாட்களாக கருதப்பட்ட நெருக்கடி நிலை காலகட்டத்தில் தான் வெளிச்சத்துக்கு வந்தவர் நவீன் சாவ்லா. நேரு குடும்பத்திற்கு மிகவும் விசுவாசமான சாவ்லா, அந்தக் குடும்பத்தினரின் உத்தரவை சிரமேற் கொண்டு, அதனை அப்படியே செயல்படுத்தி மக்களுக்கும் நாட்டுக்கும் பெரும் இடையூறுகளையும் சேதங்களையும் ஏற்படுத்தியவர்.
நெருக்கடி நிலை குறித்து விசாரித்த நீதிபதி ஷா கமிஷனின் கடும் விமர்சனத்திற்கு ஆளான முக்கிய அதிகாரிகளில் சாவ்லாவும் குறிப்பிடத்தக்கவர். அரசு பதவியில் இருக்க அறவே தகுதியற்ற நபர் என்று வர்ணிக்கப்பட்டவர் அவர்.
நெருக்கடி நிலைக்குப் பின்னர் வந்த ஜனதா அரசு குறுகிய காலத்தில் பதவியிழந்ததால் நடவடிக்கையிலிருந்து தப்பிய நவீன் சாவ்லா, அதன் பின்னர் மீண்டும் இந்திரா காந்தி பிரதமரானவுடன் மீண்டும் செல்வாக்கு பெற்றார்.
அன்று முதல் இன்றுவரையில் நவீன் சாவ்லா தனது விசுவாசமான செயல்கள் மூலம் படிப்படியாக வளர்ந்து தேர்தல் ஆணையர் ஆனார்.
கடந்த 2006ம் ஆண்டு நவீன் சாவ்லா தேர்தல் ஆணையராக பதவியேற்ற பிறகுதான் சர்ச்சைகள் வெளிப்படத் தொடங்கியது. காங்கிரஸ் கட்சிக்கும் நேரு குடும்பத்திற்கும் ஆதரவாக அவர் மேற்கொண்ட செயல்கள் அம்பலமானது. அவரை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா அப்போதைய ஜனாதிபதி கலாமிடம் மனு கொடுத்தது. பின்னர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது.
சாவ்லா மீதான புகார் குறித்து விசாரித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் உள்ளது என்றும், தவறுகள் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கோபால்சாமி அளித்த உறுதியின் பேரில் வழக்கை வாபஸ் பெற்றது பாரதிய ஜனதா கட்சி.
கோபால்சாமி விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீசுக்கு பதிலளிக்க தாமதித்த சாவ்லா சமீபத்தில்தான் பதில் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்தே சாவ்லாவை நீக்க கோபால்சாமி பரிந்துரை செய்துள்ளார்.
சாவ்லா மீது ஏற்கெனவே புகார் கூறப்பட்டு வந்த நிலையில், புதிதாக சில குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலை தள்ளிப்போட முயன்றது, பெல்ஜpயம் நாட்டின் விருதை சோனியா காந்தி பெற்ற போது ஏற்பட்ட சிக்கலில் இருந்து அவரை விடுவிக்க முயன்றது போன்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன
Anonymous !
ReplyDeleteலெனின் தனக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்று பார்க்கவில்லை. மக்களுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்றுதான் பார்த்தார்.
முரளிக்கண்ணன்!
ReplyDeleteநன்றி.
வினோத்!
ReplyDeleteநீங்கள் நவீன் சாவ்லாவைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள். நான் பாரதீய ஜனதாவைப் பற்றி சொல்லியிருக்கிறேன். அவர்கள் இதைப்பற்றியெல்லாம் பேச என்ன யோக்கியதை என்றுதான் கேட்டிருக்கிறேன்.
கம்யுன்ஸிட்கள் பாஜகவை இதில் குற்றம் சொல்லுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.சோம்நாத்
ReplyDeleteசட்டர்ஜு விவகாரத்தில் இவர்கள்
எப்படி நடந்து கொண்டார்கள்?.
anonymous!
ReplyDeleteபா.ஜ.கவைப்பற்றி எதாவது சொன்னால் ஏன் கம்யூனிஸ்டுகள் மீது விமர்சனம் இப்படி அநாமத்தாக வருகிறது?