-->

முன்பக்கம் � தலைவரின் தலைகள்!

தலைவரின் தலைகள்!

 

masks

 

 

அருகில் செல்லவே முடியாத துர்நாற்றம் வீசும் கார்ப்பரேஷன் லாரியின் குப்பைக்குள்ளிலிருந்து தவறி கீழே விழுந்தது....

 

காகிதம் என்று அருகில் வந்து முகர்ந்து பார்த்துவிட்டு, ப்ளக்ஸின் காரநெடியில் முகம் சுளித்து, சின்னதாய் தும்மி அங்கிருந்து நகர்ந்தது கழுதை....


மோப்பம் பிடித்து வந்த நாய் அதைக் கவ்விக் கொண்டு காய்ந்த மலங்களின் மீது  இழுத்தபடி ஓடி, கொஞ்சதூரத்தில் போட்டு விட்டுச் சென்றது.....

 

பஸ் ஒன்றை ஓவர்டேக் செய்த லாரியின் சக்கரத்தில் சிக்குண்டு, சிதைந்து, புழுதியோடு சுருண்டு முட்செடிக்குள் மாட்டித் தொங்கியது....

 

கடந்த இருபது நாட்களாக நகரம் முழுவதும் போகிற வருகிறவர்களையெல்லாம் வானுயர நின்று பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்த தலைவரின் ஆயிரக்கணக்கான முகங்களில் ஒன்று.

Related Posts with Thumbnails

3 comments:

 1. மாதவராஜ்,

  நல்ல கவிதையாக வந்திருக்க வேண்டியது. அவசரமா எழுதுனீங்களா?

  ReplyDelete
 2. வேலன் !

  அவசரமாய் எழுதவில்லை. மாண்ட்டோவின் சொற்சித்திரங்கள் போல முயற்சித்தேன்.

  ReplyDelete
 3. உண்மை உண்மை - நல்ல கவிதை - நல்வாழ்த்துகள் மாதவராஜ்

  ReplyDelete