-->

முன்பக்கம் , � பரமபதம் அல்லது மாயாபஜார்

பரமபதம் அல்லது மாயாபஜார்

satyam3

 

 

 

 

 

 

 

 

 

போட்டிகள் நிறைந்த உலகத்தின்
பந்தயத் தடத்தில் இப்போது
வேகமாக ஓடிக் கொண்டிருந்த குதிரை
கண்முன்னே விழுந்து விட்டது.

 

போட்டியாளன் ஒருவன் வெளியேற்றப்பட்டதில்
கூடவே 'பங்கு' கொண்டவர்கள் எவருக்கும்
எந்த சந்தோஷமும் இல்லை
மிரண்டு, நடுங்கியே பார்க்கிறார்கள்.

 

தனது போட்டியாளன் யார் விழுந்தாலும்
மக்களை ஏமாற்றும் தங்களது யுத்த தந்திரம்
ஒன்று அம்பலமாகிறது
என்று அவர்களுக்குத் தெரியும்.

 

கால் தடுக்கி விழுந்தான் என்பார்கள்
அல்லது
அதிக ஊக்க மருந்து உட்கொண்டான் என்பார்கள்.

 

இந்த ஓடுகளமும்,
தொடர்ந்து இதிலேயே ஓடுவதும்
முக்கியம் அவர்களுக்கு.

 

"லாபம் குறைந்தால்
மூலதனத்திற்கு மூச்சுத்திணறல் ஏற்படும்.
தன்னை நிலைநிறுத்திக் கொள்ள
எது வேண்டுமானாலும் செய்யும்"
மார்க்ஸின் வரிகள் இப்போது
"சத்தியமா'க ஒலிக்கிறது! Related Posts with Thumbnails

6 comments:

 1. கூட்டாகச் செய்த சதியில் அகப்படவன் கள்ளன். மற்றவன்?

  உங்களைப் பற்றிய அறிமுகப் பதிவு ஒன்று எழுதியுள்ளேன் நேரம் கிடைக்கும்போது பார்க்கவும்

  எழுதி மேற்செல்லும் இலக்கியம்

  ReplyDelete
 2. வேலன்!

  படித்து விட்டேன். சந்தோஷம்.

  //கூட்டாகச் செய்த சதியில் அகப்படவன் கள்ளன். மற்றவன்?//

  இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.... மெல்ல மெல்ல கசியும்.
  ஆனால் சதியே செய்யாத 56000 ஊழியர்கள் கதி?
  ரொம்ப கஷ்டமாயிருக்கு வேலன்...

  ReplyDelete
 3. 53000 ஊழியர்கள் கதி??????

  ReplyDelete
 4. மாதவராஜ்,

  சத்தியமான வரிகள் - பந்தயத்தில் விலக்கப் பட்டவனை விட மற்ற வீரர்கள் அதிகம் கவலைப் பட வேண்டும். என்ன செய்வது .......
  ஒன்றுமறியா 53000 பணியாளர்களின் எதிர்காலம் ??????

  ReplyDelete
 5. சீனா!

  நினைக்கவே கஷ்டமாய் இருக்கிறதுதான்
  அவர்களை விடவும் நமது விவசாயிகள்,
  கூலித் தொழிலாளர்கள் என நிறைய எளிய மக்கள்
  இங்கு நிறைந்திருக்கிறார்கள்.

  எல்லோருக்காகவும் சிந்திக்கவும், கொதிக்கவுமான
  இதயங்கள் நிறைய வேண்டும்.

  ReplyDelete
 6. பொன்ராஜ்!

  சீனாவுக்குச் சொன்னதுதான்....
  இந்த அமைப்பை அம்பலப்படுத்த வேண்டும் முதலில்.

  ReplyDelete